இந்திய கிரிக்கெட்

பதிரானாவ இந்த முறை சிஎஸ்கே வாங்காது.. அதுக்கு காரணமே சிஎஸ்கே சூப்பர் ஸ்டார் பிளேயர்தான் – ஸ்ரீகாந்த் பேச்சு

தற்போது சிஎஸ்கே அணியில் இருந்து கழட்டி விடப்பட்டு இருக்கும் இலங்கை வேகப் பந்துவீச்சாளர் மதிஷா பதிரனாவை எந்த அணி வாங்குவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நாளை 19ஆவது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் சில வெளிநாட்டு நட்சத்திர வீரர்களும், சில உள்நாட்டு இளம் வீரர்களும் பெரிய வேலைக்கு போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

பதிரனா எங்கு போவார்?

இதுவரையில் சிஎஸ்கே ஐபிஎல் வரலாற்றில் இந்த வருடம் ஐபிஎல் சீசனில்தான் முதல் முறையாக கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் உடனடியாக மறுசீரமைப்பு வேலைகளை ஆரம்பித்தது. இதன் ஒரு பகுதியாக மதிஷா பதிரனாவை கழட்டிவிட்டது. தற்போது அவரை மீண்டும் சிஎஸ்கே வாங்குமா? என்ற கேள்வி இருக்கிறது.

இதுகுறித்து பேசி உள்ள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் “பதிரனா நிச்சயமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத்தான் செல்வார். ஏனென்றால் அங்கு சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் பிராவோ இருக்கிறார். அவர்தான் இவருக்கு முன்பு பயிற்சி அளித்தார். மேலும் கொல்கத்தா முஸ்தாபிஷூருக்கும் ஏலத்தில் செல்லும். கடந்த சீசனில் வைபவ் அரோகரா சரியாக இல்லை. அவர்களுக்கு சில வேகப்பந்து வீச்சு விருப்பங்கள் தேவை”

- Advertisement -

மீண்டும் இவரை வாங்கணும்

“கொல்கத்தா கேமரூன் கிரீனையும் கூடவே குயின்டன் டி காக்கையும் சேர்த்து வாங்க வேண்டும். அவர்கள் குயின்டனை முன்பே கழட்டி விட்டார்கள். ஆனால் தற்போது அவரை மீண்டும் அவர்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அவர் நல்ல ஃபார்மில் இருப்பதோடு, இந்திய கண்டிஷனுக்கு நன்றாக பழகி இருக்கிறார். எனவே நான் அவரை வாங்குவதற்கு முழு முயற்சி செய்வேன்”

இதையும் படிங்க : விராட் கோலி சும்மா சாதிக்கல.. அபிஷேக் அத ஞாபகத்துல வச்சு இத செய்யணும் – முகமது கைஃப் அறிவுரை

“ஒருவேளை அவர்கள் குயின்டனை வாங்கவில்லை என்றால் ஜானி பேர்ஸ்டோவை வாங்கலாம். இவர்களுடன் நிச்சயமாக கேமரூன் கிரீன் இருப்பார். தற்போது அவர்களுக்கு அதிரடியான ஒரு விக்கெட் கீப்பிங் தொடக்க ஆட்டக்காரர் தேவைப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts