தற்போது சஞ்சு சாம்சன் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறி வருவதை பார்ப்பதற்கு தனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் ரன்கள் எடுக்க முடியாமல் மிகவும் திணறி வருகிறார். அதே சமயத்தில் இன்னொரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி அசத்தி வருகிறார்.
தற்போது திலக் வருமா இல்லாதது சஞ்சு சாம்சனுக்கு பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. இதன் காரணமாக இரண்டாவது விக்கெட் கீப்பர் இஷான் கிஷானுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தில் சஞ்சு சாம்சன் ரன்கள் எடுக்காமல் போக இஷான் கிஷான் ரன்கள் எடுப்பது அவருடைய இடத்திற்கு பிரச்சினையாகி இருக்கிறது.
பொதுவாக சஞ்சு சாம்சன் ஒரு போட்டியில் ரன்கள் எடுத்தால் அடுத்து அவர் எப்போது ரன்கள் எடுப்பார் என்று சொல்ல முடியாத நிலையே இருந்து வந்திருக்கிறது. அவருக்கு ரன்கள் எடுப்பதில் நிலைத்தன்மை இல்லாதது அவருடைய திறமையை தாண்டி அவருக்கு வாய்ப்பு தர முடியாமல் செய்து விடுகிறது. தற்போதும் அதே பிரச்சனைதான் தொடர்ந்து வருகிறது.
இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “சஞ்சு சாம்சன் ரன்கள் எடுக்க முடியாமல் இருந்து வருவதை பார்க்க எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இப்போது நீங்கள் இஷான் கிஷானுக்கு வாய்ப்பை மறுக்க முடியாத நிலைமை உருவாகி இருக்கிறது. அவர் சஞ்சு சாம்சனை விட அதிரடியான பேட்ஸ்மேன். சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்திருக்கிறார்”
இதையும் படிங்க : 44 ரன்னுக்கு 4 விக்கெட் போனாலும் நாங்க இப்படித்தான் ஆடுவோம்.. அந்த பையன் தெளிவா இருக்கார் – சூரியகுமார் யாதவ் பேச்சு
“சஞ்சு சாம்சனின் பிரச்சனை நிலைத்தன்மை இல்லாததுதான். அவர் ஒரு போட்டியில் ரன்கள் எடுத்தால் அடுத்த சில போட்டிகளில் ரன்கள் எடுப்பதில்லை. அவர் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருந்திருந்தால் நியூசிலாந்து தொடரில் ரன்கள் எடுத்திருக்க முடியும். அவற்றின் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்து ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது அவருக்கான இடம் ஆபத்தில் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.