நேற்று நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 153 ரன் டார்கெட்டை பத்து ஓவர்களில் எட்டி அதிரடியாக வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.
தற்போது இந்திய டி20 அணி விளையாடும் முறை மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. முதல் நான்கு இடங்களில் இருந்து வேகமாக ரன் வருகிறது. குறிப்பாக அபிஷேக் ஷர்மா 300க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அனாயசமாக அடித்து நொறுக்குகிறார். அவரை கட்டுப்படுத்துவது எதிரணியின் பவுலர்களுக்கு மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது.
மாறாத ஒரே அணுகுமுறை
இந்திய டி20 அணி முதலில் பேட்டிங் செய்தாலோ அல்லது இரண்டாவதாக பேட்டிங் செய்தாலோ மேலும் குறைந்த ஸ்கோரை சேஸ் செய்தால் கூட அதிரடி அணுகுமுறையை மாற்றாமல் ஒரே போல விளையாட்டு வருகிறது. இதைவிட முக்கியமாக ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து விட்டாலும் அதிரடியாக விளையாடுவதை மாற்றிக் கொள்வதில்லை.
இதன் காரணமாக தற்போது இந்திய டி20 அணியின் பேட்டிங் யூனிட் எதிரணிகளுக்கு மிகவும் அபாயகரமானதாக மாறியிருக்கிறது. தற்போது கேப்டன் சூரியகுமார் யாதவும் நல்ல பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி இருப்பது இந்திய பேட்டிங் யூனிட்டை இன்னும் அச்சுறுத்தலாக மாற்றி இருக்கிறது.
நாங்கள் இப்படித்தான்
இது குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “நாங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே பேசிவிட்டோம். நாங்கள் முதலில் அல்லது இரண்டாவது பேட்டிங் செய்தாலும் ஒரே போல அதிரடியாகத்தான் விளையாடுவதாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாளை 44 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டாலும் கூட, நாங்கள் இப்படித்தான் விளையாட போகிறோம் இதிலிருந்து மாற மாட்டோம்”
இதையும் படிங்க : ஜெயிக்க முடியாதுனு எங்களுக்கே தெரியும்.. இந்தியாவின் பேட்டிங்க பாராட்டுவதற்கு முன்னாடி இதை சொல்லணும் – மிட்சல் சான்ட்னர் பேச்சு
“ரவி பிஸ்னாய் பற்றி சொல்வதாக இருந்தால் அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். அவருடைய பலம் என்ன என்பது அவருக்கு மிக நன்றாக தெரிந்திருக்கிறது. அணி அழுத்தத்தில் இருக்கும் பொழுது மற்றும் மோசமான நிலையில் இருக்கும் பொழுது அவர் மிகவும் சிறப்பானதை கொடுத்திருக்கிறார். வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வு கொடுத்து அவரை விளையாட வைத்தது மிகவும் நல்லதாக அமைந்தது” என்று கூறி இருக்கிறார்.






