ரோகித் விராட் சேர்ந்து விளையாட மாட்டாங்க.. கேப்டனுக்கு வேற ஒரு கணக்கு இருக்கு – ஸ்ரீகாந்த் பேட்டி

0
112
Virat

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் சந்திக்கிறது. இன்று இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூயார்க் நகரில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பற்றி இந்திய முன்னால் வீரர் கிரீஸ் ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.

2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அந்தத் தொடரில் அரை இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமாக தோற்று இந்திய அணி வெளியேறியது. அதற்குப் பிறகு இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் டி20 இந்திய அணியில் நீக்கப்பட்டார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் திடீரென நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடருக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் இந்திய டி20 அணிக்கு அழைக்கப்பட்டார்கள்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு அஜித் அவர்கள் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர்கள் தேவை என உணர்ந்தது. எனவே இவர்கள் இருவரும் தற்பொழுது டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் கிரீஸ் ஸ்ரீகாந்த் ” ஒரு அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இணைந்து விளையாடி உலகக் கோப்பையை வெல்வதற்கு இதுதான் கடைசி வாய்ப்பா? என்றால் ஆம் இதுதான் கடைசி வாய்ப்பு என்று நினைக்கிறேன். இதற்கு மேல் இவர்கள் இருவரும் ஒரு உலகக் கோப்பையில் சேர்ந்து விளையாட மாட்டார்கள். 2026ஆம் ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது. இதில் எல்லோரும் விளையாட விரும்புவார்கள். விராட் கோலி 2026ஆம் ஆண்டு வரை டி20 கிரிக்கெட் விளையாட முடியும்.

இதையும் படிங்க : பாபர் நீங்க தோனி கிடையாது.. எல்லாரும் ஷாகின் அப்ரிடிக்கு பெரிய தப்பு பண்ணிட்டிங்க – அகமத் சேஷாத் விமர்சனம்

ரோகித் சர்மா 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றார். அவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை தான் அதிகம் விரும்பினார். ஆனால் அதற்கான வாய்ப்பை அவர் தவறவிட்டார். தற்போது அவர் ஒரு கேப்டனாக டி20 உலக கோப்பையை இந்திய அணிக்கு வெல்ல விரும்புவார். மேலும் ரோகித் சர்மா தன்னைவிட அணிக்காகவும் நாட்டிற்காகவும் இந்த உலகக் கோப்பையை வெல்ல பெரிதும் விரும்புவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -