இந்திய நட்சத்திர மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா களத்தில் இளம் வீரர்களை எவ்வாறு வழிநடத்தி வெற்றி பெற வைக்கிறார்கள்? என்பது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முழுமையாக வாய்ப்பு பெற்ற இடம் வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் இருவரும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் தங்களது முதல் சதத்தை அடித்தார்கள். இந்த இருவரையும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா களத்தில் சிறப்பாக வழி நடத்தினார்கள்.
இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்
இதுகுறித்து பேசி உள்ள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இவர்கள் இருவரும் இளம் வீரர்களை வழிநடத்தும் விதத்தை பாருங்கள். ஜெய்ஸ்வால் ஆரம்பத்தில் நிறைய நேரம் போராடினார். அவர் தன்னுடைய முதல் 60 பந்தில் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அந்த நேரத்தில் ரோகித் சர்மா அவரை எப்படி வழி நடத்தினார் என்று பாருங்கள்”
“ஜெயஸ்வால் தன்னுடைய பேட், கைகள், கால்கள் என தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார். அந்த நேரத்தில் அவரிடம் ரோகித் சர்மா தொடர்ந்து நிதானமாக இருக்கும்படி வலியுறுத்திக் கொண்டே இருந்தார். அவசரப்பட வேண்டாம் எனச் சொல்லிக் கொண்டே இருந்தார். அந்த நேரத்தில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்”
ருதுராஜுக்கு நடந்தது
“ரோகித் சர்மா அவுட் ஆனவுடன் உள்ளே வந்த விராட் கோலி ஜெய்ஸ்வால் சதம் அடிக்க வழிநடத்த ஆரம்பித்தார். இதுதான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் மகத்துவம். இரண்டாவது போட்டியில் ருதுராஜை வழிநடத்தினார் அவர் தன்னுடைய முதல் சதத்தை ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் அடித்தார். நேற்று ஜெய்ஸ்வாலை வழிநடத்தி சதம் அடிக்க வைத்தார்”
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் பேட்டிங்ல இந்த 3 மாற்றங்களையும் செய்யணும்.. வேற மாதிரி லெவல் காட்டலாம் – இர்பான் பதான் அறிவுரை
“இப்படி இளம் வீரர்களை இருவரும் சேர்ந்து சிறப்பாக வழி நடத்திக் கொண்டு செல்லும் விதத்திற்கு நான் அவர்களை மிகவும் பாராட்டுகிறேன். மேலும் இந்தியர்கள் உள்ள பந்துவீச்சாளர்களை கூட ரோகித் சர்மா மிகவும் சிறப்பாக பீல்டிங் செய்யும்போது வழி நடத்திக் கொண்டு இருந்தார் என்று கூறியிருக்கிறார்.






