இந்திய இளம் வீரர் ஹர்ஷித் ராணாவை தான் அதிகம் விமர்சனம் செய்திருக்கிறேன் எனவும், ஆனால் தற்பொழுது அவர் தன்னை கவனிக்கும்படி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாராட்டி இருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பேட்டிங்கில் 23 பந்தில் 29 ரன்கள் எடுத்து, ஹர்ஷித் ராணா இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதற்கு முன்பாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் செய்தது அவசியம்தான்
இதுகுறித்து பேசி உள்ள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “நான் ஹர்ஷித் ராணாவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவருக்கு அந்த விமர்சனம் தேவையாக இருந்தது. எல்லாருக்கும் ஒரு விஷயத்தை நிரூபிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவரும் தற்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்”
“சீக்கா சார் தயவு செய்து என்னை பாருங்க நான் இப்பொழுது ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர், மோசமான வீரர் கிடையாதுனு சொல்லி வரமாதிரி இருக்கு. அவர் முக்கியமான நேரங்களில் விக்கெட் எடுக்கிறார். விக்கெட் எடுப்பது மிகவும் அவசியமானது. அருமையான விஷயத்தை செய்து கொண்டிருக்கிறார்”
இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை
“கேஎல்.ராகுல் ஐந்தாவது இடத்தில் வராமல் ஜடேஜாவுக்கு பிறகு ஏன் வருகிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் துவக்க வீரராக கூட வந்து விளையாடலாம் அந்த அளவுக்கு சிறந்தவர். ஆனால் அவர் கீழ் வரிசையில் வந்து கொண்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ஆயுஸ் பதோனியை தேர்வு செய்தது ஏன்.. கொஞ்சமாவது இதை யோசித்துப் பாருங்கள் – இந்திய பேட்டிங் கோச் பேச்சு
இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் காயமடைந்த வாஷிங்டன் சுந்தர் இடத்தில் நிதீஷ் குமார் ரெட்டி விளையாடுவாரா இல்லை ஆயுஸ் பதோனி விளையாடுவாரா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.






