இந்திய அணியில் அபிஷேக் சர்மா மிகவும் வித்தியாசமான சிறப்பான பேட்ஸ்மேனாக இருப்பதாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாராட்டி இருக்கிறார்.
நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபிஷேக்சர்மா கொடுத்த அதிரடியான தொடக்கம் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. அவர் 35 பந்துகளை மட்டுமே சந்தித்து 240 ஸ்ட்ரைக் ரேட்டில் 85 ரன்கள் குவித்தார். இதனால் நியூசிலாந்து அணியின் பக்கம் இருந்து போட்டியை அவர் ஆட்டம் இழப்பதற்குள் பறித்து விட்டார்.
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும் பொழுது ” அபிஷேக் சர்மா பேட்டிங்கில் பெரிய மாற்றத்தை போட்டியில் ஏற்படுத்தி விடுகிறார். டி20 கிரிக்கெட் பொருத்தவரையில் தொடக்க வீரர் இடம் மிகவும் முக்கியமானது. அவர் அக்ராஸ் ஷாட் அடிப்பதில்லை. நின்ற இடத்திலிருந்து ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிக்கவும் முயற்சி செய்வதில்லை. அவருடைய உயரத்தால் அவருக்கு நல்ல ரீச் கிடைக்கிறது. அதை சிறப்பாக பயன்படுத்துகிறார்”
“அதே சமயத்தில் அவர் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு அடித்து விட வேண்டும் என்றும் நினைப்பது கிடையாது. அவர் மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடுகிறார். அவருக்கும் மற்ற இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது”
“அபிஷேக் ஷர்மா அரை சதம் அடித்தால் உங்கள் அணியின் வெற்றிக்கு வேறு எதுவுமே தேவைப்படுவதில்லை. அவர் அரைசதம் அடித்துவிட்டால் நீங்கள் போட்டியில் எளிதாக வெற்றி பெற முடியும். அவர் அதைச் செய்தால் இந்திய அணி எளிதாக 200 ரன்கள் எடுக்கும். நாம் நம்முடைய பேட்டிங்கை வைத்து எதிரணியை வீழ்த்த முடியும். நம்முடைய பேட்டிங் வரிசையில் மேலிருந்து கீழ் வரையில் கோல் அடிக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : சூரியகுமார் அப்படி அவுட் ஆனதுதான் சரி.. ஷிவம் துபே பத்தி டீம்ல அதை பேசிகிட்டு இருக்காங்க போல – அஸ்வின் கருத்து
“அபிஷேக் ஷர்மா சீக்கிரத்தில் அவுட் ஆனால் அது இந்திய அணிக்கு பிரச்சினையாக இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனா இஷான் கிஷான் இன்னும் ரன் அடிக்க ஆரம்பிக்கவில்லை. அவர் அதைச் செய்தால் அவரே ஒரு அபிஷேக் ஷர்மாதான். பிறகு திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் என நம்முடைய முதல் ஆறு பேர் ஆட்டத்தையே மாற்றக்கூடியவர்கள். அவர்களால் தனியாக போட்டியை வெல்ல முடியும்” என்று கூறி இருக்கிறார்.