என்னை யாரும் திட்டாதிங்க.. கில்லுக்கு இடமில்ல.. என் இந்திய டெஸ்ட் பிளேயிங் XI இதுதான் – ஸ்ரீகாந்த் தேர்வு

0
60
Srikanth

நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி துவங்க இருக்கும் நிலையில் தன்னுடைய இந்திய பிளேயிங் லெவனில் சுப்மன் கில்லுக்கு இடம் கிடையாது என இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அதிரடியாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும் பொழுது தான் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தால் நிச்சயம் தன்னுடைய விளையாடும் அணியில் சுப்மன் கில்லை தேர்வு செய்ய மாட்டேன் எனவும், குறிப்பிட்ட ஒரு இந்திய வீரருக்கு வாய்ப்பு கொடுப்பேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

என்னை இதனால் திட்ட செய்யலாம்

இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் இது குறித்து பேசும்பொழுது “நான் கேப்டனாக இருந்தால் சுப்மன் இல்லை பிளேயிங் லெவனில் சேர்க்க மாட்டேன். என்னைய இதனால் நீங்கள் திட்டமும் செய்யலாம் ஏற்காமல் போகலாம். ஆனால் நான் இப்படித்தான் செல்வேன். மூன்றாவது இடத்திற்கு விராட் கோலி, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் என்று யாரை வேண்டுமானாலும் களம் இறக்குவேன். மேலும் ஆறாவது இடத்தில் சர்ப்ராஸ்கானுக்கு வாய்ப்பு தருவேன்” என்று கூறியிருக்கிறார்.

தன் மகனுடன் யூட்யூப் சேனலில் நடந்த இந்த விவாதத்தில் தன்னுடைய இறுதி முடிவு இதுதான் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிக உறுதியாக கூறியிருந்தார். மேலும் கில் ரன்கள் சமீபத்தில் எடுத்திருக்கிறார் என்றால் சர்ப்ராஸ் கானும் சமீபத்தில் ரன்கள் எடுத்திருக்கிறார் எனவே அவரை என்னால் விட முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரீகாந்தின் இந்திய பிளேயிங் லெவன்

ஸ்ரீகாந்த் தன்னுடைய அணியில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரையும் வைத்து, வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் சிராஜை கொண்டு வந்திருக்கிறார். மேலும் ஐந்தாவது பந்துவீச்சாளருக்கான இடத்தில் வேகப் பந்துவீச்சாளர் வேண்டுமென்றால் ஒருவரை சேர்க்கலாம் எனவும் சுழல் பந்துவீச்சாளர் தேவை என்றால் கட்டாயம் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேர்வு செய்த இந்திய டெஸ்ட் பிளேயிங் லெவன் :

ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் சிராஜ்.

- Advertisement -