ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட்டை அவுட் செய்து முகமது சிராஜ் நடந்து கொண்ட விதத்திற்காக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
முகமது சிராஜ் குறிப்பிட்ட இந்த போட்டியில் ஹெட் விக்கெட் எடுத்து வழக்கம்போல் கொண்டாடினார். அப்பொழுது ஹெட் ஏதோ கூட கோபமான சிராஜ் அவரை வெளியே செல்லும்படி கையை நீட்டி ஆக்ரோஷமாக சைகை செய்தார். தற்போது இதற்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
உண்மையில் நடந்தது என்ன?
முகமது சிராஜ் ஹெட் விக்கெட்டை கைப்பற்றிய பொழுது அவர் வழக்கமான கொண்டாட்டத்தையே செய்தார். ஆனால் ஹெட் ஏதோ கூறவே முகமது சிராஜ் அவரை வெளியே செல் என்று சைகை செய்தார். இதில் தனிப்பட்ட முறையில் அவர் மீது ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை. எதிரணியில் ஹெட் சிராஜை பார்த்து சிறப்பாக பந்து வீசினீர்கள் என்று சொன்னதாகவும், அது சிராஜால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
இதற்கடுத்து இதுகுறித்து சிராஜ் பேசும்பொழுது “நீங்கள் வீடியோவை பார்த்தே தெரிந்து கொள்ளலாம் ஹெட் அந்த முறையில் பேசவில்லை அவர் கெட்ட வார்த்தை பேசினார் அதனால் நான் கோபப்பட்டேன் என்று தெரிவித்திருந்தார்”. பிறகு போட்டி முடிந்ததும் இருவரும் இந்த விஷயத்தை விட்டு வெளியேற முடிவு செய்து சமரசம் ஆகிவிட்டார்கள்.
உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது ” ஹெட் பந்துவீச்சை இரக்கமில்லாமல் அடித்து நொறுக்கினார். அவர் சிராஜ் பந்துவீச்சில் ரைட், லெப்ட், மிடில் என எல்லா பக்கங்களிலும் அடித்தார். சிராஜ் உனக்கு மூளை இல்லையா? ஏதாவது பைத்தியம் பிடித்து விட்டதா?ஹெட் உன்னை எல்லா பக்கத்திலும் அடித்தார்தானே. மேலும் 140 ரன் எடுத்து சிரமம் இல்லாமல் சிக்ஸர் பவுண்டரிகளை அடித்தார். இதில் எங்கிருந்து ஸ்லெட்ஜிங் பண்ண வேண்டிய தேவை வருகிறது?”
இதையும் படிங்க : 109 ரன்.. தென் ஆப்பிரிக்கா வெற்றி.. ஒரே நாளில் இறங்கிய ஆஸி.. WTC புள்ளி பட்டியலில் மாற்றம்.. இலங்கை அணி வெளியேறியது
“ஒரு பேட்டர் எந்தவித சிரமமும் இல்லாமல் உங்களுக்கு எதிராக 140 ரன்கள் எடுத்திருக்கிறார். நீங்கள் இதற்காக அவரை பாராட்ட வேண்டும். மாறாக நீங்கள் அவரிடம் வம்புக்கு செல்ல கூடாது. நீங்கள் திட்டமிட்டது போல் முதல் 10 ரன்னுக்குள் வெளியேற்றவில்லை. மேலும் அஸ்வினை ஹெட் ஒரு சுழற் பந்துவீச்சாளராகவே கருதவில்லை. அவர் டிராக்கில் சும்மா நடனம் ஆடுகிறார்” என்று கூறியிருக்கிறார்.






