இந்திய கிரிக்கெட்

இஷான் கிட்ட இருக்க இந்த திறமை யார்கிட்டயும் இல்லை.. நியூசி பவுலர்களை வெறுப்படையை வச்சுட்டாரு – ஸ்ரீகாந்த் பாராட்டு

இந்தியா அணியின் இளம் வீரர் இஷான் கிஷானின் திறமை மற்ற எந்த அணிகளிலும் யாரிடமும் இல்லை என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இஷான் கிஷான் மூன்றாவது இடத்தில் வந்து 42 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார். அவர் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்களில் 271 ரன்கள் எடுத்தது. மேலும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

சோதியை சோதிச்சிட்டார்

நேற்றைய போட்டியில் இஷான் கிஷான் நியூசிலாந்து சுழல் பந்துவீச்சாளர் சோதியில் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 28 ரன்கள் குவித்தார். அங்கிருந்து அவருடைய அதிரடி உச்சத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து அவர் ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்களை பறக்க விட்டு சதத்தையும் நிறைவு செய்தார்.

இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “சோதிக்கு எதிரான 12வது ஓவர் மிகப்பெரியதாக அமைந்தது. அவர் தான் நியூசிலாந்திலேயே இருந்திருக்கலாம் என்று நினைத்திருக்க கூடும். இஷான் அவர்களை அடித்து நொறுக்கும் போது ஏதோ பின்கோடு நம்பர் போல ஓவர் இருக்கிறது. அவர் ஆடும் போது அந்த இடத்திலேயே போட்டியை முடித்து விடுகிறார். இந்திய அணியை கட்டளையிடும் இடத்திற்கு எடுத்துச் செல்கிறார்”

- Advertisement -

அபிஷேக் ஷர்மாவுக்கு மாற்று

“இது வெறும் ஆதிக்கம் செலுத்தும் மட்டும் கிடையாது; அதையும் தாண்டியது. அவர் மீண்டும் வந்ததும் போட்டிகளில் கோல் அடிப்பதை நாம் பார்த்தோம். ஆனால் அது ஒன்று இரண்டு என சிக்ஸர்களில் இல்லை. நேற்று மட்டும் பத்து சிக்ஸர்கள் அடித்தார். அவர் பவுலர் யார் என்றே பார்ப்பது கிடையாது. அவரிடம் பிடித்தது என்னவென்றால் அவர் இரு முறை யோசிப்பது கிடையாது. தைரியமாக விளையாடுகிறார்”

இதையும் படிங்க : இந்திய அணியை ஜெயிக்கிறது கஷ்டம்.. பவுண்டரி ரோப் மட்டும் கொஞ்சம் தள்ளி வைத்திருக்கலாம் – மிட்சல் சான்ட்னர் பேட்டி

“இப்போது அபிஷேக் ஷர்மா இல்லையென்றால் இஷான் கிஷான் என்று தெரிந்து விட்டது. அவருடைய ஆட்டம் மூச்சடைக்க வைக்கிறது. மேலும் அது குறித்து விவரிக்க வார்த்தைகளே கிடையாது. அவருடைய சில ஷாட் பற்றி பேசவே முடியாது. அவருடைய திறமை வேறு யாருக்கும் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by