இந்திய கிரிக்கெட்

வருண் சக்கரவர்த்தி மும்பையா இருந்திருந்தா வெறித்தனமா கொண்டாடுவீங்க.. இது நியாயம் இல்ல – ஸ்ரீகாந்த் விமர்சனம்

இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மும்பை வீரராக இருந்திருந்தால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு இருப்பார் என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்கள் மட்டுமே மூன்று ஓவருக்கு விட்டு தந்து மூன்று முக்கிய விக்கெட்டை கைப்பற்றுகிறார். மேலும் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்படவில்லை. சிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பையாக இருந்திருந்தால்…

இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது ” வருண் சக்கரவர்த்தி மும்பையாக இருந்திருந்தால் இன்னும் அதிகமாக கொண்டாடப்பட்டு இருப்பார். பொதுவாக மும்பையில் இருந்து யாராவது வந்து விளையாடினால் வெறித்தனமாக கொண்டாடுவார்கள். ஆனால் இங்கு வருண் வந்து அமைதியாக பந்து வீசிவிட்டு சென்று விடுகிறார். அவர் குறித்து யாரும் ஹைப் செய்து பேசுவது இல்லை. ஒரு ஸ்பின்னர் நீண்ட ரன் ஆப் எடுத்து சிறப்பாக பந்து வீசுகிறார். மக்கள் இன்னும் அவரை புரிந்து கொள்ளவில்லை”

“வருணுக்கு யாரும் பெரிதாக கிரெடிட் தருவது கிடையாது. பும்ரா ஒரு தனித்துவமான பவுலர். அவர் போல ஒருவரை நீங்கள் உருவாக்கவே முடியாது. அதுபோலத்தான் நமது வருண் சக்கரவர்த்தியும். அவர் நேற்றைய போட்டியில் டாப் ஆர்டர் விக்கட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆனால் அவருக்கு மேன் ஆப் த மேட்ச் தரவில்லை. பொதுவாக பந்துவீச்சாளர்களுக்கு தரப்படுவதில்லை”

- Advertisement -

இவரும் சிறந்தவர்தான்

“தற்போது வரும் சக்கரவர்த்தி மேன் ஆப் த டோர்னமெண்ட் விருதுக்கு தகுதியானவராக இருந்து வருகிறார். மொத்தமாக ஒரு நாளில் அவரது நான்கு ஓவர்களையும் அடித்தால் கூட 35 ரன்கள் தான் விட்டு தருவார். அதிலும் கூட அவர் ஒன்று அல்லது இரண்டு விக்கெட் எடுத்து விடுவார். இருந்தும் அவருக்கு யாரும் அதிக மதிப்பு தருவதில்லை”

இதையும் படிங்க : எங்க பேட்ஸ்மேன்கள் இந்த ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும்.. இத செஞ்சா கப் நமக்குதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

“தற்போது நவீன கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலராக அவர் இருந்து வருகிறார். அவரை எதிர்த்து பலராலும் விளையாட முடிவதில்லை. விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு பும்ரா உச்சத்தில் இருந்தது போல அவர் இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by