நேற்று டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.
மேலும் இந்திய அணி முதல் சுற்றில் நான்கு போட்டிகளையும் வென்று இரண்டாவது சுற்று முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில் முக்கியமான சுற்றில் இந்திய பேட்ஸ்மேன்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சூரியகுமார் யாதவ் மறைமுகமாக சுட்டி காட்டி இருக்கிறார்.
இதை செய்ய வேண்டும்
இந்திய அணிக்கு ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விழும் பொழுது அதற்கு அடுத்து வரும் வீரர்கள் அதிரடியாக விளையாட முயற்சி செய்து அணியை பிரச்சனைகள் தள்ளி விடுகிறார்கள். குறிப்பாக ஹர்திக் பாண்டியா 2 போட்டிகளில் சூழ்நிலையை உணர்ந்து கொள்ளாமல் ஆடி சிக்கலை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சூரியகுமார் யாதவ் நேற்று பேசும் பொழுது “நாங்கள் நேற்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இரண்டாம் பகுதியில் கொஞ்சம் பனிப்பொழிவு இருந்ததால் எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு சிரமம் இருந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தோம். இந்த மாதிரியான சூழ்நிலை மீண்டும் வரலாம். எனவே அப்போது ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தங்களது பொறுப்பை புரிந்து கொள்ள வேண்டும். பிறகு நம்மால் ரன்கள் எடுக்க முடியும். அதற்கான சக்தி நம்மிடம் இருக்கிறது”
துபே சிறப்பாக செய்தார்
“துபே நியூசிலாந்து டி20 தொடரில் ஒரு போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடியிருந்தார். அன்று விஷயம் அவர் பக்கம் முடியாமல் போய்விட்டது. ஆனால் இன்று நாங்கள் 190 ரன்னுக்கு மேல் எடுத்து அவர் ஆட்டநாயகன் விருதும் வாங்கி இருக்கிறார். நாங்கள் பல விஷயங்களை சரியாக செய்திருக்கிறோம். இந்த வெற்றியில் கூட நாங்கள் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம்”
இதையும் படிங்க : இந்திய அணிக்கு இந்த பிரச்சனை இருக்குன்னு சொன்னா ஏத்துக்க மாட்டேன்.. இந்த ஒரு ஷாட்ல எல்லாமே மாறும் – சிவம் தூபே நம்பிக்கை
“இந்திய அணியில் நிறைய பந்துவீச்சு விருப்பங்கள் இருக்கிறது. இது கூட நல்ல தலைவலிதான். எந்த மைதானம் எப்படியான பவுலர்களை கேட்கிறதோ அவர்களை களம் இறக்குவோம். தற்போது பேட்டிங் யூனிட் பொருத்தவரையில் எல்லோரிடம் இருந்தும் ரன்கள் வந்து கொண்டிருக்கிறது. இதுவும் எங்களுக்கு நல்ல விஷயமாக அமைந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






