வெறும் 120 ஸ்ட்ரைக் ரேட்.. கம்பீர் சாம்சனை வச்சு திரும்ப தப்பு பண்றார்.. இதைத்தானே செஞ்சிருக்கணும் – வாசிம் ஜாபர் விமர்சனம்

0
77
Sanju

நேற்று ஒமான் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் பேட்டிங் சரளமாக இல்லை எனவும் அவரை தவறான இடத்தில் விளையாட வைத்து விட்டதாக வாசிம் ஜாபர் விமர்சனம் செய்திருக்கிறார்.

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளை வென்று இரண்டாவது சுற்று தகுதி பெற்றுவிட்டது. எனவே நேற்று ஒமான் அணிக்கு எதிரான போட்டியை பயிற்சி ஆட்டமாகவே எடுத்துக் கொண்டது. இதன் காரணமாக சூரியகுமார் யாதவ் இறுதி வரியில் பேட்டிங் செய்ய வரவில்லை.

- Advertisement -

சஞ்சு சாம்சன் நிலை என்ன?

நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் திடீரென மூன்றாவது இடத்தில் களம் இறக்கப்பட்டார். இதுவரை விளையாடியிருக்காத புது பந்துவீச்சாளர்களை விளையாடியதாலும், ஏற்கனவே மெதுவான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களும் வேகம் குறைவாக வீசியதாலும் சஞ்சு சாம்சன் மிகவும் தடுமாறினார்.

மேலும் 40 ரன்கள் தாண்டி இருந்த பொழுது கொடுத்த கேட்ச் வாய்ப்பை எதிரணி வீரர்கள் தவற விட்டார்கள். இதைத் தொடர்ந்து சுதாரித்து விளையாடிய சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து 45 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த போட்டியில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 124 என குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இங்கு அனுப்பி இருக்கக் கூடாது

இதுகுறித்து வாசிம் ஜாபர் பேசும்பொழுது “சஞ்சு சாம்சன் பேட்டிங் வழக்கம் போல சரளமாக இல்லை. அவருடைய ஸ்டிரைக் ரேட் மிகவும் குறைவாக 120 என்பதற்குள் இருந்தது. பொதுவாக இப்படியான அணிகளுக்கு எதிராக அவர் களமிறங்கிய இடத்தில் அவருக்கு இது மிகவும் அதிகமாக இருக்கும்”

இதையும் படிங்க : ஆசிய கோப்பையில் நீக்கம்.. என்னுடைய நேரம் வரும்.. நான் இவங்கள நம்பல – மனம் திறந்த ஜெய்ஸ்வால்

” பெரிதும் அறியப்படாத அசோசியேட் அணிகளுக்கு எதிராக இது நடக்க செய்யலாம். ஏனென்றால் இந்த அணி வீரர்களுக்கு எதிராக நீங்கள் அதிகம் விளையாடியிருக்க மாட்டீர்கள். அவர்களுடைய பந்துவீச்சு வேகம் குறைவாக இருக்கும். இது உங்களை சரளமாக பேட்டிங் செய்ய விடாது. மேலும் சஞ்சு சாம்சன் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும். என்றால் அவர் அடுத்து அந்த இடத்தில்தான் வரப்போகிறார். அப்படி இருக்கும்போது அவரை மூன்றாவது இடத்தில் அனுப்பியது தவறு” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -