இந்திய கிரிக்கெட்

கில் நல்ல பேட்ஸ்மேனே கிடையாது.. தமிழ்நாட்டு பையனுக்கு அந்த வாய்ப்ப கொடுக்கணும் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

இந்திய இளம் வீரர் சுப்மன் கில் மிகவும் மதிப்பிடப்பட்ட வீரர் என்றும், அவர் பத்தாவது வாய்ப்பில் ஏதாவது ரன்கள் எடுத்து இந்திய அணியில் ஒட்டிக் கொள்கிறார் என்றும் இந்திய முன்னாள் வீரரும் தமிழக முன்னாள் வீரருமான ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடாத கில் மூன்று போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். குறிப்பாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் ஆட்டம் இழந்த விதம் போட்டியில் இந்திய அணி தோற்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இதனால் அவர் மீது விமர்சனங்கள் நிறைய இருக்கிறது.

கில் வகைப்படுத்தப்பட்ட வீரர்

இது குறித்து ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “கில் ஒரு மிகைப்படுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர் என நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டு வருகிறேன். ஆனால் என்னுடைய பேச்சை யாருமே கேட்கவில்லை. அவர் அடிப்படை இல்லாமல் அதிக மதிப்பிடப்பட்ட வீரராக இருக்கிறார்”

“கில்லுக்கு இவ்வளவு நீண்ட வாய்ப்புகள் தரும் பொழுது சூரியகுமார் யாதவுக்கு இவ்வளவு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதா? சூரியகுமாருக்கு நல்ல தொடக்கம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அமையவில்லை என்பது உண்மைதான். ஆனால். அவரிடம் நல்ல தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால் வெள்ளைப்பந்து ஸ்பெஷலிஸ்ட் ஆக வைத்துக் கொண்டார்கள்”

- Advertisement -

இந்த தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்

“உதாரணமாக ருதுராஜ் முதல் தர கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடுகிறார். ஆனால் அவரைத் தேர்வு செய்ய இவர்கள் நினைக்கவில்லை. அதே சமயத்தில் இந்திய அணியின் ஏ சுற்றுப்பயணங்களில் தமிழகத்தின் சாய் சுதர்சன் தன்னை நிரூபித்துக் கொண்டு வருகிறார். இந்த புதியவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒரே வட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்”

இதையும் படிங்க : வரலாற்றை நிச்சயம் மாற்றுவோம்.. பைனல்ல ஆஸி அணிக்கு இதை நாங்க செய்வது உறுதி – தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா

“ஒன்பது போட்டிகளில் சரியாக விளையாடாமல் பத்தாவது போட்டியில் ரன்கள் எடுத்து அதன் மூலம் கீழ் மேலும் 10 வாய்ப்புகள் பெறக்கூடியவராக இருக்கிறார். இந்திய ஆடுகளத்தில் யார் வேண்டுமானாலும் ரன்கள் இங்கு அடிக்கலாம். நீங்கள் வெளிநாட்டில் ரன்கள் எடுப்பது தான் முக்கியமான விஷயம். இந்த இடத்தில்தான் கேஎல்.ராகுல் சிறப்பானவராக மாறுகிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by