தற்போது இந்திய அணி விளையாடும் முறை பற்றி விமர்சனம் செய்பவர்கள் குறித்து கம்பீர் என்ன சொன்னாலும் தனக்கு கவலை கிடையாது என இந்திய முன்னாள் தேர்வுக் குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் மிக மோசமான முறையில் விளையாடிக் கொண்டு வருகிறது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணித் தேர்வு மற்றும் ஒருநாள் தொடருக்கான அணித் தேர்வு தவறாக இருப்பதாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது ” இந்த போட்டியில் எதற்காக நிதீஷ் குமார் ரெட்டி விளையாட வேண்டும்? எல்லா வகையிலும் மிகச் சரியாக இருக்கின்ற அக்சர் படேல் ஏன் விளையாடக் கூடாது? ஏன் ஒவ்வொரு போட்டியிலும் இவ்வளவு வெட்டுதலும் மாற்றங்களும் செய்து கொண்டிருக்க வேண்டும்”
“ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியில் யாராவது ஒருவர் புதிதாக வருகிறார் இல்லை என்றால் அறிமுகமாகிறார். இதை அவர்கள் சோதனை என்று அழைத்துக் கொள்ளலாம். கம்பீர் இது குறித்து என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இது குறித்து எனக்கு எந்த கவலையும் கிடையாது. நான் இந்திய அணிக்கு கேப்டனாகவும் தேர்வுக் குழு தலைவர் ஆகவும் இருந்திருக்கிறேன். நான் என்ன பேசுகிறேன் என்று எனக்குத் தெரியும்”
“இந்த போட்டியில் இந்திய அணி வந்து பேசி முடித்த பிறகு ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக ரோடு போல இருப்பதாக குல்தீப் யாதவ் கூறியிருந்தார். ஆனால் இவர்கள் திரும்பி வந்து விளையாடும் பொழுது தென் ஆப்பிரிக்கா ஸ்பின்னர்களிடமும், வேகப்பந்துவீச்சாளரிடமும் விக்கெட்டை தாராளமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்”
இதையும் படிங்க : நாங்க டிக்ளர் லேட் பண்ண காரணம் இதுதான்.. கே எல் ராகுல் அவுட் ஆனத பார்த்தீங்கதானே – ஸ்டப்ஸ் பேட்டி
“தென் ஆப்பிரிக்காவின் ஹார்மர் பந்தை காற்றில் பறக்க விடுகிறார். அதனால் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி திரும்புகிறது. ஆனால் நம்முடைய ஸ்பின்னர்கள் பிளாட் ஆக வீசுகிறார்கள். ரிஷப் பண்ட் பேட்டிங் செய்த விதத்தை எடுத்துக் கொண்டால் அது அவருடைய இயல்பான ஆட்டம் என்று சொல்வார்கள். ஆனால் இந்த போட்டியில் அவர்தான் கேப்டன். அதற்கான கொஞ்சமாவது பொறுப்போடு விளையாடி இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.