கில் கேப்டன்சி தான் தோல்விக்கு காரணம்.. நேத்து மேட்ச்ல இந்த தப்ப பண்ணிருக்காரு – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
233
Srikanth

நேற்று இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 41 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தொடரை இழந்தது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த தொடரில் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்து வெளியேறினார். இதனால் மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. மேலும் நேற்றைய போட்டியில் அவர் தொடர்ந்து ஆறு ஓவர்கள் பவர் பிளேவுக்கு வெளியே வந்து வீசினார்.

- Advertisement -

செட்டில் ஆகிவிட்டார்கள்

இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “நேற்றைய போட்டியில் முதலில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் நிதிஷ் குமார் ரெட்டிக்கு தொடர்ந்து ஆறு ஓவர்கள் வீச கில் வாய்ப்பு கொடுத்தார். இதனால் என்ன நடந்தது என்றால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நல்ல முறையில் செட்டில் ஆகிக் கொண்டார்கள். முதலில் ஜடேஜா அதற்கு அடுத்துதான் ரெட்டி வந்து இருக்க வேண்டும்”

“இதேபோல புதிய பந்தில் ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்து வீசுகிறார். ஆனால் அவரை மீண்டும் மிடில் ஓவர்களுக்கு இரண்டாவது முறையாக கொண்டு வரும் பொழுது நிறைய ரன்கள் விட்டுக் கொடுக்கிறார். எனவே அவருக்கு முன்கூட்டியே ஓவர்களை முடித்து, கடைசியில் இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்”

- Advertisement -

இவர்கள் பெரிய ஏமாற்றம்

“இந்தத் தொடரில் நாம் பார்க்க வேண்டிய முக்கிய விஷயம் நம்முடைய ஸ்பின்னர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவருமே ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக பிரதான ஸ்பின்னர் குல்தீப் யாதவ் இந்த தொடர் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தடுமாறினார்”

இதையும் படிங்க : ரோகித் ஃபார்ம் சரியில்லதான்.. ஆனா அந்த ஒரு விஷயத்தை அவர் எல்லா டைமும் செய்ய முடியாது – சுப்மன் கில் பேச்சு

“சிராஜ் தன்னுடைய பந்துவீச்சில் சிறப்பாக இருந்தார். அவர் எல்லா இடங்களிலுமே சிறப்பாக பந்து வீசினார். அர்ஸ்தீப் சிங் அவருடைய பந்து வீச்சும் சிறப்பாகவே அமைந்திருந்தது. ஹர்ஷித் ராணாதான் இரண்டாவது முறையாக வரும்பொழுது ரன்களை விட்டு விடுகிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -