நேற்று இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோற்று தொடரையும் இழந்தது. இந்தத் தொடரில் ரோஹித் சர்மா மூன்று போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை. இது குறித்து இந்திய கேப்டன் சுப்பன் கில் பேசியிருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மூன்று போட்டிகளிலும் அவருக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் அந்த தொடக்கத்தை பயன்படுத்தி அவரால் பெரிய ரன் அடிக்க முடியவில்லை. நேற்றைய போட்டியில் விக்கெட் கீப்பர் ஒரு கேட்ச் வாய்ப்பை விட்ட பிறகு அதே ஓவரில் ஆட்டம் இழந்தும் வெளியேறினார்.
தலைக்கு மேல் தொங்கும் கத்தி
தற்போது இந்திய ஒருநாள் அணியில் மாற்று துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வருகிறார். அதே சமயத்தில் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் மிடில் ஆர்டர் பேக்கப் பேட்ஸ்மேன் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. ருதுராஜ் சதம் அடித்ததற்கு பிறகு தேர்வு செய்யப்படாமல் இருக்கிறார்.
இந்த வகையில் துவக்க ஆட்டக்காரராக விளையாடும் ரோஹித் சர்மாவுக்கு எந்நேரமும் செக் இருந்து கொண்டே இருக்கிறது. அடுத்து ஒரு தொடரில் சுமாராக விளையாடினால் உடனடியாக ஜெய்ஸ்வாலை விளையாட வைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இது அவருக்கு பெரிய அழுத்தத்தை உருவாக்கி வருகிறது.
எல்லா நேரத்திலும் முடியாது
இதுகுறித்து சுப்பன் கில் பேசும் பொழுது “ஆஸ்திரேலியா தொடரில் தொடங்கி அவர் தென் ஆப்பிரிக்கா தொடரின் வரையில் சிறந்த பார்மில் இருந்தார் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு இந்தத் தொடரில் சில நல்ல தொடக்கங்கள் கிடைத்தது. ஆனால் உங்களுக்கு அப்படி கிடைக்கும் தொடக்கங்களை எல்லா நேரத்திலும் பெரிய ரன்னாக மாற்ற முடியாது”
இதையும் படிங்க : விராட் கோலி இல்லை.. அந்த பையன் பேட்டிங்கை பார்த்து நியூசிலாந்து வீரர்கள் நடுங்கிட்டாங்க.. கிரிஸ் ஸ்ரீகாந்த் வியப்பு
“ஒரு பேட்ஸ்மேன் ஆக நீங்கள் எப்பொழுதும் பெரிய ரன்னாக உங்களது துவக்கத்தை மாற்ற விரும்பாதீர்கள். ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் அதை செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் உங்களால் எல்லா போட்டியிலும் அப்படி செய்யவே முடியாது. ஆனால் இது நாம் செய்ய நினைக்கும் எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்றுதான்” என்று ஆதரவாக கூறியிருக்கிறார்.






