ஐபிஎல் 2024: 12 முக்கிய விருதுகள்.. மொத்த பரிசு தொகை விபரங்கள்.. முழு பட்டியல் உள்ளே

0
2558
IPL2024

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில், கொல்கத்தா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது. இதில் மொத்தம் 12 விருதுகளும் பரிசுத்தொகைகளும் வழங்கப்பட்டது. அவற்றின் முழு விபரத்தையும் பார்க்கலாம்.

இந்த ஆண்டு ஐபிஎல் வளரும் வீரருக்கான எமர்ஜிங் பிளேயர் விருதை நிதீஷ் குமார் ரெட்டி வென்றார். அவர் பேட்டிங்கில் 13 போட்டிகளில் 303 ரன்கள் எடுத்தார். மேலும் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். அடுத்து அதிக ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடிய வீரருக்கான எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் விருதை ஆஸ்திரேலியாவில் இளம் துவக்க ஆட்டக்காரர் டெல்லி அணிக்காக விளையாடிய ஜாக் பிரேசர் வென்றார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 234.04!

- Advertisement -

அல்டிமேட் பேண்டஸி பிளேயர் மற்றும் மோஸ்ட் வேலிபல் பிளேயர் என இரண்டு விருதுகளை சுனில் நரைன் வென்றார். 42 சிக்ஸர்கள் அடித்து சூப்பர் சிக்ஸர் விருதை அபிஷேக் சர்மாவும், 64 பவுண்டரிகள் அடித்து சூப்பர் ஃபோர்ஸ் விருதை டிராவிஸ் ஹெட்டும் கைப்பற்றினார்கள்.

கேட்ச் ஆப் த சீசன் அவார்டை ரமன்தீப் சிங் லக்னோ அணிக்கு எதிராக பின்னோக்கி ஓடிச் சென்று பிடித்த கேட்ச்க்காக வென்றார். மேலும் களத்தில் அதிகப்படியான ஒழுக்கத்துடன் விளையாடி அதற்கான ஃபேர் ப்ளே அவார்டை ஹைதராபாத் அணி சென்றது.

மேலும் விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 741 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி விருதையும், பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஹர்சல் படேல் 24 விக்கெட்டுகள் கைப்பற்றி பர்பில் தொப்பி விருதையும் வென்றார்கள். இந்த எல்லா விருதுகளுக்கும் பரிசுத்தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : கம்மின்ஸ்தான் அதிர்ஷ்டத்தை எங்களுக்கு குடுத்தார்.. இவர்கிட்ட மந்திர கோல் இருக்கு – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறந்த ஆடுகள தயாரிப்புக்கான விருதை, ஹைதராபாத் ஆடுகளத் தயாரிப்பாளர் வென்றார். இந்த விருதுக்கு மட்டும் பரிசுத்தொகை 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு 20 கோடி ரூபாயும், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த ஹைதராபாத் அணிக்கு 12 1/2 ரூபாயும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.