இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பையில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நியூசிலாந்து அணி இந்த போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஆட்டமிழந்த விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
சிக்கலில் மாட்டிக்கொண்ட நியூசிலாந்து
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்கள், அதற்குப் பிறகு விளையாடிய இந்திய அணி 263 ரன்களும் குவித்தது.
இந்த சூழ்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய நியூசிலாந்து அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர ஆட்டக்காரர் ரச்சின் ரவிந்திரா அஸ்வினின் ஓவரில் தான் சந்தித்த மூன்றாவது பந்தியிலேயே விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டால் ஸ்டம்ப் செய்யப்பட்டு வெளியேறினார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ரச்சின் ரவிந்த்ரா அதீத நம்பிக்கையில் இருப்பதாகவும் இந்திய பவுலர்களை சரியாக கணிக்காவிட்டால் நிலைமை மோசமாக இருக்கும் எனவும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஓவர் கான்பிடன்ஸ் நல்லதல்ல
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “தன்னம்பிக்கைக்கும் அதீத நம்பிக்கைக்கு இடையே ஒரே ஒரு மெல்லிய கோடு தான் இருக்கிறது. அதுதான் தற்போது அவருக்கும் நடந்திருக்கிறது ரவீந்த்ரா முந்தைய பந்தில் பவுண்டரி அடித்தார். ஆடுகளத்தின் முன் வந்து பந்தை பாதியிலேயே சந்திக்க முயற்சிப்பது சாத்தியமில்லாத விஷயம். பந்து அப்போது திரும்பும் நிலையில் உங்கள் கணக்கில் நான்கு ரன்கள் மட்டுமே இருந்தன. நீங்கள் மொத்தமாக நான்கு பந்துகள் கூட விளையாடவில்லை.
இதையும் படிங்க:நான் முடிவை மாத்திக்கிறேன்.. இந்திய டெஸ்ட்ல ஆஸி டீம்ல இந்த பையன ஓபனரா வைங்க – ரிக்கி பாண்டிங் பேட்டி
பவுன்ஸ் இருக்கக்கூடிய ஆடுகளத்தில் அதுபோன்று விளையாட முயற்சிப்பது கடினம் தான். அதற்குப் பிறகு இரண்டு பெரிய விக்கெட்டுகளும் கேரம் பந்துகளால் வந்தன. ஒரு கேரம் வந்து லெக் கட்டர் போல மாறினால் உங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கும். இல்லையெனில் பந்து அது போன்ற மாற்றத்தை ஏற்படுத்தாது. கேரம் பந்து ஐந்து முதல் ஆறு டிகிரி வரை மாறும்போது ஏற்பட்ட சிக்கலில் இந்திய பந்துவீச்சாளர்கள் அதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். அவர்களால் தொடர்ந்து ஒரே இடத்தில் பந்து வீச முடியும். எனவே இந்திய அணி மீது இது போன்ற தாக்குதலை தொடுக்க இயலாது” என்று கூறியிருக்கிறார்.