ஐபிஎல் 2024

ஐபிஎல்லில் இதான் பிரச்சனை.. கூடவே இருந்து ரகசியம் தெரிஞ்சுட்டு இப்போ தோற்கடிச்சுட்டாரு – கேகேஆர் கேப்டன்

நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பில் சால்டின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்கியா ரகானே பெங்களூர் அணி வெற்றி பெற்ற விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

கொல்கத்தா பெங்களூர் ஐபிஎல்

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும் அதற்க்கு பின்னர் பெங்களூர் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை கேப்டன் ரகானே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். பெங்களூர் அணியை பொறுத்தவரை ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்டியா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே கொல்கத்தா அணிக்காக விளையாடியதால் அந்த அணியின் பலம், பலவீனம் நன்கு அறிந்திருந்த பில் சால்ட் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். 31 பந்துகளில் 9 பௌண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 56 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க, மறுமுனையில் விராட் கோலி 59 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த சூழ்நிலையில் கேகேஆர் அணியின் கேப்டன் தோல்விக்கான காரணம் குறித்து கூறியுள்ளார்.

- Advertisement -

எங்கள் பலம் பலவீனம் தெரியும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்த போட்டியின் இயல்பு என்ன என்பது நன்றாக தெரியும். ஒவ்வொரு அணியிலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வீரர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அதன் மையக்கரு அப்படியே இருக்கும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட அணிக்காக விளையாடும் போது ஒன்று அல்லது இரண்டு சீசன்களுக்கு பிறகு நீங்கள் மற்றொரு அணிக்காக விளையாடும் போது அவர்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். மேலும் எந்த வகையான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்றும் உங்களுக்கு நன்றாக தெரியும்.

இதையும் படிங்க:ரசலுக்காகவே ஸ்பெஷல் திட்டம்.. 13 ஓவருக்கு பின் எல்லா புகழும் அந்த 2 பேருக்குதான் – ரஜத் பட்டிதார் பேச்சு

எனவே பில் சால்ட் அந்த சாதகத்தை பெற்றிருந்தார். அவர் மிகச் சிறப்பாக பேட்டிங்கை வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு ஒரு அற்புதமான சீசனை கொண்டு இருந்தார். எனவே இந்த நிலைமைகளை அவர் நன்றாக அறிவார் என்று தெரியும். அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார் அவருக்கு வாழ்த்துக்கள். யார் அணியை மாற்றினாலும் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை இது தான். இதுதான் ஐபிஎல் கிரிக்கெட் இயல்பு” என்று ரகானே பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts