“கோலி நீ எப்பவும் பெரிய ஆள்யா.. பாக்கவே அருமையா இருக்கு!” – ரவி சாஸ்திரி மனம் திறந்த பாராட்டு!

0
1423
Virat

நேற்று இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்திய அணி இருக்கிறது.

நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. பும்ரா மிகச்சிறப்பாக பந்துவீசி ஆப்கானிஸ்தான் அணியை கட்டுப்படுத்தி நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மிக அதிரடியான துவக்கத்தை தந்து 63 பந்துகளில் சதம் அடித்து 131 ரன்கள் எடுத்து வெளியேறினார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் இசான் கிஷான் 47 ரன்கள் எடுத்தார்.

இவர் ஆட்டம் இழக்க விராட் கோலி தன்னுடைய சொந்த டெல்லி மைதானத்திற்குள் நுழைய ரசிகர்கள் அளவு கடந்த ஆரவாரத்தில் ஈடுபட்டார்கள். சொந்த மைதானம் என்பதால் மட்டும் வரவேற்பு அதிகமாக இருக்கவில்லை.

நேற்று களத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் நவீன் உல் ஹக் இருக்கவே ஆரவாரம் மிக அதிகமாக இருந்தது. இந்த நேரத்தில் தலையிட்ட விராட் கோலி அவர் யாரும் கேலி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு அடுத்து இருவரும் கைகுலுக்கி தங்களுடைய பிரச்சினையை தீர்த்துக் கொண்டது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.

- Advertisement -

இது குறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “இது விளையாட்டின் ஒரு பகுதியாகும். கடந்த காலங்கள் கடந்ததாகவே இருக்கட்டும். நீங்கள் காலப்போக்கில் முன்னேற வேண்டும். நேரம் எதையும் குணப்படுத்தக்கூடிய சிறந்த ஒன்று. உங்கள் வழியில் செல்லாத விஷயங்களையும் அனுசரித்து செல்ல காலம் கற்றுக் கொடுக்கிறது.

அதைப் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. மேலும் பெரிய திரையில் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. நாள் முடிவில் இதுதான் ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் தங்களுடைய பொறுமையை இழந்திருக்கலாம். சில வார்த்தைகளை பரிமாறி இருக்கலாம். விளையாட்டில் பல விஷயங்கள் கலப்பதால் ஏற்படுகிறது.

ஆனால் இன்று நடப்பதை பார்க்க அருமையாக இருந்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு இதை வேறு வழியில் செய்திருக்கலாம் என்று இருவரும் உணர்ந்து இருப்பார்கள். விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது. எல்லோரும் பார்க்கும்படி தீர்த்துக் கொள்ள முடிந்தால் எதுவும் பிரச்சனை கிடையாது!” என்று கூறி இருக்கிறார்!