“தலைப்பு செய்தியில் கோலி சமி இருப்பார்கள்.. ஆனா உண்மையான ஹீரோ இவர்தான்!” – நாசர் ஹுசைன் ஆச்சரியப்படுத்தும் பேச்சு!

0
3072
Virat

நேற்று மும்பை வான்கடை மைதானத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில், இந்திய அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு 12 ஆண்டுகள் கழித்து நுழைந்திருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 29 பந்துகளில் அதிரடியாக ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இந்திய அணியின் பேட்டிங் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான பாதை அவருடைய ஆரம்ப பேட்டிங்லேயே உருவாகிவிட்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் அவர் ஒரு முனையில் நின்று விளையாட, கில் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார்கள். குறிப்பாக ஸ்ரேயாஸ் இந்த தொடரில் கடந்த சில ஆட்டங்களாக மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

மேலும் பந்து வீச்சிற்கு வந்த இந்திய அணி சிறிது தடுமாற்றத்தை சந்தித்தாலும் கூட, முகமது சாமி யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த தொடர் முழுக்கவும் அசத்தி வருகிறார். அதையே நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்து நியூசிலாந்தின் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இப்படியானின் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

நேற்றைய போட்டி குறித்து பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ” நாளைய தலைப்புச் செய்தியில் விராட் கோலி, முகமது சமி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இருப்பார்கள். ஆனால் இந்திய அணியின் உண்மையான ஹீரோ மற்றும் இந்திய அணியின் உண்மையில் மாற்றியவர் ரோகித் சர்மாதான்.

டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் தோற்ற பொழுது என்ன நடந்தது என்று தினேஷ் கார்த்திக் எங்களிடம் கூறினார். இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அடித்த சமமான ஸ்கோரை எளிதாக அடித்து வெற்றி பெற்ற பொழுது, நாம் மாற வேண்டும் என்று ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.

அப்படி சொல்வது ஒன்றும் வெறுமனே நடை பயிற்சி செய்வது கிடையாது. அவர்களை சோதனைக்கு உட்படுத்துவது இதுவே முதல் முறை. நாக் அவுட் சுற்றில் பயமில்லாமல் விளையாட முடியுமா? கேப்டனை முதலில் வெளியேறி வந்து அதிரடியாக விளையாட போகிறோம், என்னை பின் தொடருங்கள் என்று டிரெஸ்ஸிங் ரூமுக்கு காட்டினார். ரோகித் சர்மாதான் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!

இன்று இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் வருகின்ற ஞாயிறு நவம்பர் 19ஆம் தேதி இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடும்!

- Advertisement -