இவ்வளவு சீக்கிரத்தில் பனிப்பொழிவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை – கொல்கத்தா அணியிடம் தோற்ற பிறகு கேப்டன் கோலி கருத்து

0
118
RCB vs KKR

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் களம் கண்ட பெங்களூரு அணிக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை எதுவுமே சரியாக அமையவில்லை. குறிப்பாக சுழற்பந்து வீச்சில் அப்படியே சரிந்து போனது, கேப்டன் கோலி தலைமையிலான பெங்களூர் அணி. கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி குழப்பத்தில் பெங்களூரு அணி மொத்தமாக சுருண்டு விட்டது. எளிமையான இலக்கை துரத்திய கொல்கத்தா அணி வெறும் பத்தே ஓவர்களில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த பிறகு கேப்டன் விராத் கோலி தோல்வி பெற்றதற்கு பனிப்பொழிவு தான் காரணம் என்று கூறினார். மேலும் ஆட்டத்தில் இவ்வளவு சீக்கிரமாக பனிப்பொழிவு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் அவர் பேசும்போது பெங்களூரு அணிக்கு சரியான பார்ட்னர்ஷிப் எதுவும் அமையவில்லை என்றும் அவர் கூறினார்.

- Advertisement -

42-1 ஏற்று இருந்த அணி அடுத்த 20 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது மிகவும் மோசமானது என்றும் கோலி கூறினார். இந்த தோல்வியின் மூலம் இன்னும் எந்தெந்த இடங்களில் மேம்பட வேண்டும் என்று அறிய உதவிகரமாக இருக்கும் என்றும் இது போன்ற தோல்விகளால் தான் பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஒரு ஆட்டத்தில் கற்ற பாடத்திலேயே அணி எழுச்சி பெற்று விடும் என்று தான் நம்புவதாகவும் இன்னொரு தோல்வியின் மூலம் தான் பாடம் கற்க வேண்டும் என்ற நிலை வராது என்றும் அவர் கூறினார். மேலும் கேப்டன் கோலி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசுவதாக கூறினார். வருவருண் சக்கரவர்த்தி டி20 உலக கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்ற போவதாகவும் அடுத்த சில வருடங்களில் இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார் என்று கூறினார் கோலி.

அடுத்த போட்டி பெங்களூரு அணிக்கு சென்னையுடன் என்பதால் இந்தத் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சிறப்பாக விளையாடுவார்களா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

- Advertisement -