நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஒன்பது போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று, ஒரு போட்டியையும் தோற்காத அணியாக இந்திய அணி இருந்து வருகிறது.
நேற்று லீக் சுற்றின் கடைசி போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக பெங்களூர் மைதானத்தில் இந்திய அணி முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் மூவர் அரை சதங்கள் அடிக்க கடைசி இருவர் சதங்கள் அடிக்க அபார வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியிலும் இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் அதிரடியான தூக்கத்தை கொடுத்தார்கள். முதலில் ரோகித் சர்மா வழக்கம் போல் அதிரடியாக ஆரம்பிக்க, இந்த முறை கில் அதைத்தொடர்ந்து வேகமாக விளையாடினார். 12 ஓவர்களில் இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
தொடர்ச்சியாக இந்திய அணிக்கு இந்த உலகக் கோப்பை தொடர்பு முழுவதும் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டத்தின் காரணமாக அதிரடியான துவக்கம் கிடைத்து வருகிறது. இதனால் அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன்கள் மிகவும் எளிதாக ஆட்டத்தை கட்டமைத்து விளையாட முடிகிறது.
இந்திய பேட்டிங் யூனிட்டுக்கு இந்திய அணியின் பவுலிங் யூனிட் நல்ல உதவியாக இருந்து வருவது போல, ரோகித் சர்மா தனி ஆளாக பெரிய உதவியாக இருந்து வருகிறார். அவருடைய அதிரடியான அணுகுமுறை நல்ல துவக்கத்தை தருவதோடு, எதிரணி பந்துவீச்சாளர்களையும் நம்பிக்கை இழக்க வைத்து விடுகிறது.
இதுவரை ஒன்பது போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 509 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தவர்களில் நான்காவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பைகளில் 500 ரன்கள் தாண்டிய வீரர் என்கின்ற அரிய சாதனையும் படைத்திருக்கிறார்.
ரோகித் சர்மா குறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது ” சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடையாது. நாம் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம் பற்றி மட்டும் பேசுகிறோம். ஆனால் ரோகித் சர்மா வித்யாசமானவர். எதிரணியின் பந்துவீச்சு தாக்குதல் எதுவாக இருந்தாலும், அவர் பேட்டி மிகவும் எளிதான ஒன்றாக மாற்றுகிறார்!” என்று கூறி இருக்கிறார்!
மேலும் ரோகித் சர்மா குறித்து சோயப் மாலிக் கூறுகையில் “ரோகித் சர்மா எதிரணியின் ஐந்து பந்துவீச்சாளர்களையும் குறி வைக்கக்கூடிய ஒரு பேட்ஸ்மேன். வாசிம் அக்ரம் மேலே சொன்ன மற்ற பேட்ஸ்மேன்கள் மூன்று, நான்கு பந்துவீச்சாளர்களை மட்டுமே குறி வைப்பார்கள். ஆனால் ரோகித் ஐந்து பந்துவீச்சாளர்களையும் குறிவைத்த தாக்குவார்!” என்று கூறியிருக்கிறார்!






