அவர் போன்ற ஒரு வீரரை தான் அனைத்து அணிகளும் வாங்க நினைக்கும் – கே.எல்.ராகுல் குறிவைக்கும் வேகப்ப்பந்து வீச்சாளர் குறித்து பேச்சு

0
130
KL Rahul

அனைத்து இந்திய ரசிகர்களும் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர் மீது தற்போதிலுருந்தே மிக ஆர்வமாக இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக அடுத்த மாதம் 12 மற்றும் 13ஆம் தேதி ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. முன்பு இருந்ததைவிட அகமதாபாத் மற்றும் லக்னோ என 2 புதிய அணிகளுடன் மொத்தமாக 10 அணிகள் மெகா ஏலத்தில் பங்கேற்க போவதால், முன்பு இருந்ததை விட சுவாரஸ்யம் சற்று அதிகமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

லக்னோ அணி நிர்வாகம் தங்களுடைய அனைத்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் என்று பெயரிட்டுள்ளது. அந்த அணி கேஎல் ராகுல், ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் இந்திய இளம் வீரர் ரவி பிஷ்னோய் ஆகியோரை கைப்பற்றியுள்ளது. இந்த அணியை கேஎல் ராகுல் தலைமை தாங்குவார்.

- Advertisement -

லக்னோ அணியை தலைமை தாங்க இருக்கும் கேஎல் ராகுல் தென்ஆப்பிரிக்க வீரர்கள் குறித்து தற்போது ஒரு சில விஷயங்களையும், அவர்களை பற்றி மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.

காகிசோ ரபாடா மார்க்கோ ஜென்சென் மற்றும் வேன் டெர் டஸ்சென் பற்றி பேசியுள்ள கே எல் ராகுல்

சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் கேஎல் ராகுல் இந்திய அணியில் அனைத்து போட்டியிலும் இடம்பெற்று விளையாடினார். தற்பொழுது தென்ஆப்பிரிக்க அணியில் ரபாடா மார்க்கோ ஜென்சென் மற்றும் வேன் டெர் டஸ்சென் ஆகியோர் மிக சிறப்பாக விளையாடுவதாகவும், நிச்சயமாக இவர்கள் மெகா ஏலத்தில் நல்ல தொகைக்கு போவார்கள் என்றும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

மேற்கூறிய வீரர்கள் குறிப்பாக ரபாடா ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக எவ்வாறு விளையாடினார் என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. 145 கிலோ மீட்டர் வேகத்தில் மிக வேகமாக பந்து வீசும் திறமை பெற்றவராவார். மிக ஸ்மார்ட்டாக விளையாடும் தன்மையும் அவரிடம் உண்டு. ஒவ்வொரு அணியும் அவர் போன்ற ஒரு பந்துவீச்சாளரை தான் கைப்பற்ற நினைப்பார்கள். நிச்சயமாக இந்த ஆண்டு மெகா ஏலத்தில் காகிசோ ரபாடா மிகப்பெரிய தொகைக்கு விலை போவார் என்று கேஎல் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மறுபக்கம் இளம் வேகப்பந்து வீச்சாளரான மார்க்கோ ஜென்சென் இதற்கு முன் மும்பை அணியில் விளையாடி இருக்கிறார். ஆனால் தற்பொழுது டெஸ்ட் போட்டிகளில் முற்றிலும் மாறுபட்டவராக மிக அதிரடியாக பந்து வீசி மிரட்டி வருகிறார். இந்திய அணி வீரர்கள் மத்தியில் இவரைப் பற்றி நிறைய விஷயங்களை பேசியதாகவும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கூடிய விரைவில் இவர் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார் என்று தாங்கள் பேசிக் கொண்டதாக கேஎல் ராகுல் கூறியுள்ளார்.

இறுதியாக வேன் டெர் டஸ்சென் பற்றி பேசியுள்ள கே எல் ராகுல், “ஸ்பின் பந்து வீச்சை எப்படி சமாளித்து விளையாட வேண்டும் என்கிற திறமை அவருக்கு நிறைய இருக்கிறது. ஐபிஎல் தொடரை பொறுத்த வரையில் ஒவ்வொரு அணியும் மிடில் ஓவர்களில் ஸ்பின் பந்து வீச்சில் மூலமாக எதிரணியை கட்டுப்படுத்த நினைப்பார்கள்.வேன் டெர் டஸ்சென் நிதானமாக நின்று ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வரும் காரணத்தினால் அவரை வாங்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.