இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் விழா இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய வீரர்களோடு களம் இறங்குகிறது.
இந்த சூழ்நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து சில முக்கிய கருத்துக்கள் பேசி இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக வீரர்களை வாங்கி தனது அணியை வலுவாக கட்டமைத்தது. இதில் குறிப்பிடத்தக்கவிதமாக கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சிஎஸ்கே முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், திரும்பவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொண்டுவரப்பட்டார். மேலும் இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஆப்கானிஸ்தான் அணியின் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளரான நூர் அகமது பத்து கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார்.
தொடக்கத்தில் இவருக்கு மும்பை மற்றும் சென்னை அணிகளிடையே போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சிஎஸ்கே ஒரே அடியாக 10 கோடி ரூபாயை உயர்த்தியது. இதனால் அவர் சென்னை அணிக்கு வாங்கப்பட்டார். கடந்த ஐபிஎல் சீசனில் அவர் குஜராத் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் நூர் அகமது 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறார். எனது கேள்வி என்னவென்றால் அதை நியாயப்படுத்தும் வகையில் அவர் விளையாடுவாரா? என்பது தான் என்று சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
எனது கவலை இதுதான்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நூர் அகமது நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு வெளிநாட்டு வீரராக இருக்கிறார். ஆனால் அவர் மீது எனக்கு ஒரு கவலை இருக்கிறது. அவர் ஒரு மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளராக இருப்பது மட்டுமல்லாமல் ஒரு முக்கிய வீரராகவும் திகழ்கிறார். எனது கேள்வி என்னவென்றால் அவர் வாங்கப்பட்ட 10 கோடி ரூபாய்க்கு அந்தத் தொகையை அவரால் நியாயப்படுத்த முடியுமா? என்பது தான்.
இதையும் படிங்க:ஹர்திக் ஒண்ணும் பெரிய ஆள் கிடையாது.. எங்க பிளேயர்தான் இதுல பெரிய ஆள் – அக்தர் பேச்சு
அவர் சென்னை அணிக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? அது சிஎஸ்கேவுக்கு சீராக இருக்குமா? இதற்கு அனைத்தும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். மேலும் அஸ்வினை விட அவர் அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது மூன்று பேர் கொண்ட சுழல் தாக்குதல் கொண்டுள்ளது. உங்களுக்கு நினைவிருந்தால் கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நான்கு சுழல் வீச்சாளர்களைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே சிஎஸ்கே அணியும் தற்போது அந்த வகையில் தான் செயல்பட போகிறது என்று நினைக்கிறேன்” என பத்ரிநாத் பேசியிருக்கிறார்.