62 ஓவர்.. கைவிடப்பட்ட போட்டி.. ஆஸி செமி பைனலுக்கு தகுதி.. இங்கிலாந்து கையில் ஆப்கானின் சிறிய அரை இறுதி வாய்ப்பு

0
1373

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரின் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் நடைபெற்ற 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.

இதில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது மழையால் ஆட்டம் கைவிடப்பட தற்போது ஆப்கானிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு இங்கிலாந்து அணியின் கையில் இருக்கிறது.

- Advertisement -

மழையால் ரத்தான ஆட்டம்

இன்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் களமிறங்கி விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் செடிக்குல்லா அடல் சிறப்பாக விளையாடி 95 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 85 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் அஸ்மதுல்லா ஓமர்சாய் அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 5 சிக்சர்களோடு 67 ரன்கள் குவித்தார்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்கள் குவித்தது. இதில் தொடக்க வரிசை ஆட்டக்காரர் குர்பாஸ் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார். மேலும் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரஷீத் கான் 17 பந்துகளை எதிர் கொண்டு 19 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் ட்வார்சியஸ் 9 ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் கையில்

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷாட் 15 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்கள் எடுத்து வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதிக்கு அழைத்துச் சென்றனர். 40 பந்துகளை எதிர்கொண்ட ஹெட் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 59 ரன்கள் மற்றும் ஸ்மித் 19 ரன்கள் என விளையாடிக் கொண்டிருந்த நிலையில் 12.5 ஓவர்களில் 109 ரன்கள் இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ரொம்ப வருத்தமா இருக்கு.. கேப்டன் பதவியை விட்டு விலகுகிறேன்.. ஜாஸ் பட்லர் சோகம்.. CT 2025 தோல்வி எதிரொலி

நீண்ட நேரம் ஆகியும் மழை நிக்காத காரணத்தினால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாட உள்ளன. ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால், இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணியை 207 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். ஒருவேளை இங்கிலாந்து அணி இரண்டாவது பேட்டிங் செய்தால் 11.1 ஓவர்களுக்குள் இலக்கை துரத்தி வெற்றி பெற வேண்டும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று நடந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணி அடுத்து சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -