இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது நாளின் மதிய உணவு இடைவேளையின் போது வெற்றியை ஏறக்குறைய நெருங்கி இருக்கிறது. ரோகித் சர்மா ஜடேஜாவை பயன்படுத்தி திருப்பும் முனையை ஏற்படுத்தினார்.
இந்த போட்டியில் நேற்று நான்காவது நாளில் பேட்டிங் செய்ய வந்த பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 233 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு மொமினுல் ஹாக் சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் 107 ரன்கள் எடுத்தார் இந்திய அணியின் தரப்பில் பும்ரா மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
ரோகித் கம்பீர் வித்தியாசமான திட்டம்
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி எவ்வளவு ரன்கள் எடுக்கிறோம் என்பதை விட எவ்வளவு சீக்கிரத்தில் எடுக்கிறோம் என்பது முக்கியம் என்கின்ற திட்டத்தில் விளையாடியது. இதன் காரணமாக விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் விளையாடிய இந்திய அணி வெறும் 34.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இதைத்தொடர்ந்து 52 ரன்கள் பின்தங்கி மீண்டும் விளையாட வந்த பங்களாதேஷ் அணி நேற்று ஆட்ட நாள் முடிவில் 26 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் இழந்து இருந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தார்.
மஞ்ச்ரேக்கர் ஏற்கனவே தந்த ஐடியா
இந்த நிலையில் இன்று காலையில் ஐந்தாவது நாளில் மொமினுல் ஹக் விக்கெட்டை அஸ்வின் சீக்கிரத்தில் கைப்பற்றினார். இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் நஜ்முல் சாந்தோ மற்றும் துவக்க ஆட்டக்காரர் ஷத்மன் இஸ்லாம் இருவரும் சேர்ந்து சிறப்பாக விளையாடிய அரைசத பார்ட்னர்ஷிப் தாண்டினார்கள். இதனால் போட்டி டிரா நோக்கி செல்லும் வாய்ப்பு இருந்தது.
ஏற்கனவே இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மன்ச்ரேக்கர் இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தால் இடது கை சுழல் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை ரோகித் சர்மா பயன்படுத்தாமல் வீணடித்து வருகிறார் என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் இன்றும் ரவீந்திர ஜடேஜாவை ரோகித் சர்மா பயன்படுத்தாமல் இருந்தார்.
இதையும் படிங்க : 58 பந்தில் ஆஸிக்கு எதிராக சதம்.. 13வயது இந்திய அதிசய வீரர் சாதனை.. சச்சின் யுவராஜ் சிங்கை தாண்டி ரெக்கார்ட் செய்தவர்
பிறகு உள்ளே வந்த ரவீந்திர ஜடேஜா நஜ்முல் சாந்தோ 19, லிட்டன் தாஸ் 1, ஷாகிப் அல் ஹசன் 0 விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தினார். ஷத்மன் இஸ்லாம் 50 ரன்எடுத்து ஆகாஷ் தீப்பிடமும், மெஹதி ஹசன் 9 ரன், தைஜூல் இஸ்லாம் 0, முஷ்பிக்யூர் ரஹீம் 37 ரன்களில் பும்ராவிடம் சிக்கினார்கள். அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட் கைப்பற்ற 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பங்களாதேஷ் அணி 94 ரன்கள் முன்னிலை எடுக்க இந்திய அணிக்கு இலக்கு 95 ரன் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.