இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் ஐந்து சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் ஐந்து சிறந்த பந்துவீச்சாளர்களை தரவரிசைப்படுத்துமாறு கேட்கப்பட்டது.
இதில் கே.எல்.ராகுல் கொடுக்கப்பட்ட 10 வீரர்களை வைத்து தன்னுடைய தரவரிசையை கூறினார். இதில் இந்திய வீரர் பும்ராவுக்கு அவர் சிறந்த பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் சேர்ந்து விளையாடி வருவதும், மேலும் உலகின் தற்போது பலரும் உம்ராவை முதல் இடத்தில் வைத்த போதும் கேஎல்.ராகுல் இப்படியான முடிவை எடுத்திருக்கிறார்.
சிறந்த ஐந்து பேட்ஸ்மேன்கள்
கேஎல் ராகுலிடம் முதல் பெயராக டிராவிஸ் ஹெட் பெயர் வைக்கப்பட்டது. அவர் எப்படியும் இந்திய வீரர்களின் பெயர் வரும் என்கின்ற காரணத்தினால் ஹெட்டுக்கு ஐந்தாவது இடத்தை கொடுத்தார். தொடர்ந்து ரோகித்துக்கு இரண்டாவது இடத்தையும், அடுத்து வந்த பாபர் அசாமுக்கு நான்காவது இடத்தையும், சூரியகுமார் யாதவுக்கு மூன்றாவது இடத்தையும், கடைசியாக வந்த விராட் கோலிக்கு முதல் இடத்தையும் கொடுத்தார்.
கேஎல்.ராகுல் ஐந்து சிறந்த பேட்ஸ்மேன்களாக ரேங்க் வரிசையில் ரன் மெஷின் விராட் கோலி, இந்திய கேப்டன் ரோகித் சர்மா, அதிரடி இந்திய வீரர் சூரியகுமார் யாதவ், பாகிஸ்தான் நட்சத்திரம் பாபர் அசாம் மற்றும் ஆஸ்திரேலியா அதிரடி வீரர் டிராவிஸ் ஆகியோர் வருகிறார்கள்.
சிறந்த ஐந்து பவுலர்கள்
இந்த முறை கே எல் ராகுலுக்கு டேல் ஸ்டெயின் பெயர் கொடுக்கப்பட, அவர் டேல் ஸ்டெயினை பட்டியலில் உச்சத்தில் வைத்தார். இதைத்தொடர்ந்து ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இரண்டாவது இடத்தையும், ரஷித் கானுக்கு நான்காவது இடத்தையும், நஷீம் ஷாக்கு ஐந்தாவது இடத்தையும், பும்ராவுக்கு மூன்றாவது இடத்தையும் கொடுத்தார்.
இதையும் படிங்க : பும்ரா ஈஸியா ஏமாத்துவார்.. உலக பவுலர்களே நீங்க நம்பற அந்த விஷயம் அவருக்கு தேவையில்ல – பாக் பசித் அலி பேட்டி
கேஎல்.ராகுல் கொடுத்துள்ள ரேங்க் வரிசையில் டேல் ஸ்டெயின், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜஸ்பிரித் பும்ரா, ரஷீத் கான் மற்றும் நஷீம் ஷா ஆகியோர் வருகிறார்கள். இந்தப் பட்டியலில் பும்ராவுக்கு கேஎல்.ராகுல் முதல் இடத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேஎல். ராகுல் மூன்றாவது இடத்தையே கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.