பும்ரா ஈஸியா ஏமாத்துவார்.. உலக பவுலர்களே நீங்க நம்பற அந்த விஷயம் அவருக்கு தேவையில்ல – பாக் பசித் அலி பேட்டி

0
76
Basit

இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிமெண்ட் தரையில் ஆடுகளத்தை அமைத்தால் கூட பேட்ஸ்மேன்களை ஏமாற்றி விக்கெட் எடுக்கக் கூடியவர் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.

உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் நாட்டை வேகப்பந்துவீச்சாளர்களை தயாரிக்கும் தொழிற்சாலை என்று கூறுவார்கள். ஆனால் தற்போது அவர்களுடைய வேகப்பந்து வீச்சுத் துறையும் மிகவும் மோசமான சர்வே சந்தித்திருக்கிறது. இப்படியான நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான பசித் அலி இந்தியாவின் பும்ராவை மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

மூன்று வடிவ ஆதிக்கம்

இன்றைய நிலையில் பும்ராவுக்கு பந்து என்ன நிறத்தில் இருக்கிறது என்பதும் பிரச்சனை கிடையாது, ஆடுகளத்தில் என்ன இருக்கிறது என்பதும் பிரச்சினை கிடையாது. அவர் கையில் பந்து இருந்தால் அந்த குறிப்பிட்ட ஆடுகளத்திற்கு தகுந்தபடி பந்தின் நிலைமைக்கு தகுந்தபடி பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்கான சரியான திட்டத்தில் செயல்பட்டு வீழ்த்துகிறார்.

அவருடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சன், மற்றும் அவர் குறைவான தூரம் ஓடிவந்து 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசுவது போன்றவை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை கணிப்பதில் பெரிய சிக்கல்களை உருவாக்குகிறது. இதன் காரணமாக எந்த சூழ்நிலையிலும் அவர் அதிரடியாக விக்கெட்டுகளை எடுக்கிறார்.

- Advertisement -

சிமெண்ட் தரையை கொடுங்க

பும்ரா குறித்து பேசி இருக்கும் பசித் அலி கூறும் பொழுது “சிமெண்ட் ஆடுகளத்தை பும்ராவிடம் கொடுத்தாலும் கூட அவர் தன்னுடைய வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சன் மூலமாக பேட்ஸ்மேன்களை ஏமாற்றுவார். இதுதான் உண்மை. எனவே தான் அவரை பூம் பூம் என்று அழைக்கிறோம். உலகின் மற்ற பந்துவீச்சாளர்கள் தங்களுடைய பார்ம் மற்றும் ரிதத்தை நம்பி இருக்கிறார்கள். ஆனால் பும்ரா அப்படிப்பட்டவர் கிடையாது.

இதையும் படிங்க : என்கிட்ட 150 கிமீ வேகம் தானா வரும்.. இந்திய அணிக்கு எதிரா இந்த வேலையை செஞ்சு முடிச்சிட்டோம் – பங்களாதேஷ் பவுலர் பேட்டி

அவர் உள்ளே வந்த உடனேயே அந்த ஸ்பெல்லில் மூன்று விக்கெட்டுகளை உடனேயே எடுக்கிறார். அவர் பேட்ஸ்மேன்களை மிகவும் தந்திரமாக ஏமாற்றக்கூடியவர். மேலும் அவருடைய வேகம் மிகவும் துல்லியமானதாக இருக்கும்.நீங்கள் வெள்ளைப் பந்து வடிவத்தில் விக்கெட் எடுப்பதற்கு பயன்படுத்தும் பந்துகளை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீசி விக்கெட் எடுக்கிறார் என்பதுதான் இதற்கு உதாரணம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -