201 ரன்.. ஆஸி மண்ணில் முதல் சாதனை.. 5வது இந்திய வீரராக ஜெய்ஸ்வால் புது சரித்திரம்.. பெர்த் முதல் டெஸ்ட்

0
1630
Jaiswal

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்ததில் புதிய சாதனை படைத்திருக்கிறார்கள்.

இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிசை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 14 ரன்கள் எடுத்து சுருண்டது.

- Advertisement -

கேஎல்.ராகுல் ஜெய்ஸ்வால் சாதனை

இதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்கள். இந்த ஜோடி நேற்று ஆட்டம் இழக்காமல் 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இன்று தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இறுதியில் கேஎல்.ராகுல் 176 பந்துகளில் 5 பவுண்டரிகள் உடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா மண்ணில் முதல் விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடி என்ற சாதனையை படைத்தது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் புது வரலாறு

இந்த ஜோடியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். மேலும் பெர்த் மைதானத்தில் சுனில் கவாஸ்கர், மொகிந்தீர் அமர்நாத், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலிக்கு அடுத்து சதம் அடித்த ஐந்தாவது வீரராக சாதனை படைத்து பெரிய பட்டியலில் நுழைந்தார்.

இதையும் படிங்க : 450 ரன்.. 9 விக்கெட்.. க்ரீவ்ஸ் அபார ஆட்டம்.. டிக்ளர் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி..இக்கட்டான நிலையில் பங்களாதேஷ்

இன்று மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்து 321 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. ஜெயஸ்வால் 264 பந்துகளில் 141 ரன்கள், படிக்கல் 70 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். தற்போது இந்த போட்டியில் இந்திய அணி அமைக்க முடியாத அளவுக்கு முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -