ஆஸ்திரேலிய தொடரில் கேஎல்.ராகுலா? சுப்மன் கில்லா? – ஹர்பஜன்சிங் காரணங்களோடு வெளிப்படையான பதில்!

0
182
Harbajan singh

பிப்ரவரி ஒன்பதாம் தேதி இந்திய ஆண்கள் கிரிக்கெட்ட அணி நாக்பூரில் வைத்து ஆஸ்திரேலியா அணியை பார்டர் கவாஸ்கர் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சந்திக்கிறது!

இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பு இந்தியா ஆஸ்திரேலியா தாண்டி உலக அளவில் எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆசஸ் தொடரை விட இந்தத் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது!

- Advertisement -

இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளை வெல்லும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதே சமயத்தில் இந்தியாவில் டெஸ்ட் தொடரை 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு வெல்ல முடியாமலும், ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்த இரண்டு பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியாவிடம் இழந்ததற்கு மருந்தாக ஆஸ்திரேலியா வென்றால் இருக்கும்.

தற்போதைய இந்திய அணியில் இளம் வீரர் கில் நல்ல பார்மில் இருக்கிறார். அதே சமயத்தில் துவக்க ஆட்டக்காரராக கே எல் ராகுலும் இருக்கிறார். ஆனால் இவருடைய பேட்டிங் ஃபார்ம் சரியில்லை. இவர்கள் இருவரில் யார் இடம் பெறுவார்கள் என்கின்ற குழப்பம் வெகுவாக நீடிக்கிறது.

இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் சாம்பியன் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங்
” என்னை பொருத்தவரையில் இந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கில் இருக்க வேண்டும். கில் உடைய பேட்டிங் ஃபார்ம் வேற ஒரு லெவலில் இருக்கிறது. கே எல் ராகுல் மிகச் சிறந்த வீரராக இருந்தாலும் கடந்த ஆண்டில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அவரது புள்ளி விவரங்கள் சரியாக இல்லை. ஆனால் கில் தன் வாழ்நாளின் மிகச்சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் ஒரு ஆட்டத்தில் மட்டுமல்லாது இந்த தொடர் முழுவதும் கில் துவக்க ஆட்டக்காரராக இடம்பெற வேண்டும். அவர் அவருடைய பார்மில் தன்னம்பிக்கை உடன் விளையாடினால் இந்தியாவுக்காக இந்த தொடரில் நிறைய ரன்கள் எடுப்பார். அதனால் அவர் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்!