இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடும் கேஎல்.ராகுல் முக்கியமான இரண்டு சாதனைகள் படைத்திருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு துவக்க ஆட்டக்காரராக விளையாடும் பாப் டு பிளேசிஸ் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இதன் காரணமாக மிடில் ஆர்டரின் களம் இறங்கிய கே என்றாலும் இந்த போட்டிக்கு துவக்க ஆட்டக்காரராக விளையாட வந்தார். அவர் தந்த நிலையான துவக்கத்தால் டெல்லி அணி இந்த போட்டியில் வெல்லும் இடத்தில் இருக்கிறது.
அதிக ஆவரேஜ் சாதனை
இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரராக வந்த கேஎல்.ராகுல் இறுதிவரை விளையாடிய 51 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 77 ரன்கள் எடுத்து இறுதியில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அவர் முக்கியமான இரண்டு சாதனைகளை படைத்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் குறைந்தது ஆயிரம் ரன்கள் எடுத்ததில் அதிக ஆவரேஜ் வைத்திருப்பவராக கே எல் ராகுல் சாதனை படைத்திருக்கிறார். தற்போது அவருடைய ரன் ஆவரேஜ் 48.96 என்று உச்சத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 45.86 ரன் ஆவரேஜுடன் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ருதுராஜ் 44.1 ஆவரேஜ் உடன் இருக்கிறார். நான்காவது இடத்தில் கெயில் 41.86, அடுத்த இடத்தில் பட்லர் 41.70 ரன் ஆவரேஜுடன் இருக்கிறார்கள்.
இன்னொரு முக்கிய சாதனை
மேலும் இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் அரை சதம் அடித்தார். அவருக்கு நூறாவது ஐபிஎல் இன்னிங்ஸில் 40வது அரை சதமாக துவக்க இடத்தில் அமைந்தது. விராட் கோலி 116 இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காரராக 40 வது ஐபிஎல் அரைசதத்தை எடுத்திருந்தார். அவரைவிட 16 இன்னிங்ஸ்கள் கேஎல் ராகுல் குறைவாக எடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : ருதுராஜ் உங்க ஊர் பாசத்தை காட்டாதிங்க.. ஏத்துக்க முடியாத 2 தப்பு – சிஎஸ்கே ரசிகர்கள் கோபம்
ஐபிஎல் தொடரில் துவக்க ஆட்டக்காரர்களாக அதிக அரை சதங்கள்:
60 – டேவிட் வார்னர் (163 இன்னிங்ஸ்)
49- ஷிகர் தவான் (202 இன்னிங்ஸ்)
40- கேஎல்.ராகுல் (100 இங்க்ஸ்)*
40 – விராட் கோலி (116 இன்னிங்ஸ்)






