இந்திய கிரிக்கெட்

காபாவில் இந்த ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சேன்.. அதுக்கு டெக்னிக்கை இப்படி மாத்தினேன் – கேஎல் ராகுல் விளக்கம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தன் பேட்டிங்கில் செய்துள்ள மாற்றம் குறித்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் பேட்டி அளித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய தரப்பில் பேட்டிங் டெக்னிக்கில் மிகவும் சிறப்பான பேட்ஸ்மேனாக கேஎல்.ராகுல் மட்டுமே இருக்கிறார். ஆஸ்திரேலிய சூழலில் எப்படி விளையாட வேண்டும்? என்பதிலும், மேலும் கவனத்தை சிதற விடாமலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

மோசமான தோல்வியை தவிர்த்த கேஎல்.ராகுல்

இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல்.ராகுலின் அரைசதம் இல்லாவிட்டால், தற்போது இடைவிடாமல் மழை பெய்த பொழுதிலும் கூட தோல்வியடைவதற்கு மிக அதிகபட்ச வாய்ப்புகள் இருந்தது. மேலும் இந்த தோல்வியினால் தொடரை இழக்கும் அபாயமும் இருந்தது. ஆனால் சிறப்பாக விளையாடிய கேஎல்.ராகுல் 83 ரன்கள் எடுத்தது இந்திய அணி இந்த தோல்வியில் தப்பிக்க முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

இது குறித்து பேசி உள்ள கேஎல்.ராகுல் கூறும் பொழுது “மழைக்கு நடுவே படிக்கட்டுகளில் ஓடி ஓடி ஏறி இறங்கிக் கொண்டிருந்ததால் நான் கலைப்படைந்து விட்டேன். இது எங்களுக்கு மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கும் ஒரு பெரிய சவாலாகவே இருந்திருக்கும். ஜடேஜா பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு செய்து வந்ததை இந்த போட்டியிலும் செய்து தான் யார் என்பதை நிரூபித்து இருக்கிறார். மேலும் நாளைய போட்டியில் மழை அதிகமாக இருக்கும் என்பதால், ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததைப் போலவே தற்பொழுது டிரா ஆவதற்கும் வாய்ப்புகள் அதிகரித்து விட்டது”

- Advertisement -

காபாவில் கண்டுபிடித்த விஷயம்

“முதல் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் இருந்த வேகத்தை போலவே காபாவிலும் வேகம் அப்படியே இருக்கிறது. இதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே இந்த இரண்டு மைதானங்களுக்கும் நான் ஒரு எளிய திட்டத்தை வைத்திருந்தேன். நான் பந்தை நன்றாக வரவிட்டு, உடலுக்கு அருகில் வைத்து தாமதமாக விளையாடினேன். இது இங்கு ரன் எடுப்பதற்கு எனக்கு வசதியாக சரியாக அமைந்தது”

இதையும் படிங்க : நாங்க இந்த மாதிரி ஒரு பிளான் போட்டு இருந்தோம்.. ஆனா பும்ரா ஆகாஷ் தீப் முடிச்சு விட்டுட்டாங்க – வெட்டோரி பேச்சு

“பிங்க் நிறப் பந்தை பந்து வீச்சாளரின் கையில் இருந்து கணிப்பது எனக்கு சிரமமாக இருந்தது. அவர் பந்தின் தையலை எப்படி பிடித்திருக்கிறார் என்று பார்த்து நான் அதற்கு தகுந்தபடி தயாராக முடியவில்லை. ஆனால் சிவப்பு பந்தில் என்னால் சரியாகப் பந்தை பார்த்து கணிக்க முடிகிறது. இதன் காரணமாகத்தான் என்னால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாட முடியவில்லை. இப்பொழுது நான் மீண்டும் என்னுடைய அடிப்படைகளுக்கு திரும்பி வந்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: KL Rahul

Recent Posts