நான் விரும்பிய மாதிரி இல்லை.. லக்னோ அணியில் இருந்து வெளியேற காரணமே இதுதான் – மனம் திறக்கும் கேஎல் ராகுல்

0
488

18வது ஐபிஎல் சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. சமீபத்தில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தனது வீரர்களை தக்க வைத்து பட்டியலை வெளியிட்டது.

இந்த சூழ்நிலையில் லக்னோ அணியின் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் அந்த அணியில் இருந்து வெளிவந்ததற்கான காரணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கேஎல் ராகுல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் கேஎல் ராகுல் முதல் முதலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட ஆரம்பித்தார். அதற்குப் பிறகு சில ஆண்டுகள் பஞ்சாப் அணியில் விளையாடிய நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக லக்னோ அணியால் வாங்கப்பட்டு கேப்டனாகவும் செயல்பட்டார். லக்னோ அணி ஓரளவு அவரது தலைமையில் நல்ல பங்களிப்பை வெளிப்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு கேஎல் ராகுல் மற்றும் லக்னோ அணியின் உரிமையாளர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சிறிய வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்காக கேஎல் ராகுல் லக்னோ அணியிலிருந்து வெளியேறினார். சமீபத்தில் தங்களது தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை வெளியிட்ட லக்னோ அணி பூரான், ரவி பிஷ்னாய், மயாங்க் யாதவ், ஆயுஸ் பதோனி போன்ற வீரர்களை தக்க வைத்தது. இந்த சூழ்நிலையில் லக்னோ அணியில் இருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து கே எல் ராகுல் முதன்முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

வெளியேறியதற்கான காரணம்

இதுகுறித்து அவர் கூறும் போது “நான் தற்போது புதிதாக தொடங்க விரும்புகிறேன். எனது விருப்பங்கள் என்ன என்பது குறித்து ஆராய விரும்புகிறேன். மேலும் எனக்கு சுதந்திரம் கிடைக்கும் இடத்திற்கு சென்று விளையாட விரும்பினேன், அங்கு ஒரு அணியின் சூழல் இலகுவாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். சில நேரங்களில் நீங்கள் இதிலிருந்து விலகிச் சென்று உங்களுக்கான நல்ல சூழ்நிலையை கண்டறிய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:தோனி சிஎஸ்கேவுக்கு எங்க ஆண்டர்சனை வாங்குவார்.. அதுக்கு காரணம் வயது கிடையாது இதுதான் – மைக்கேல் வாகன் கணிப்பு

அதாவது லக்னோ அணியில் கே எல் ராகுல் சுதந்திரமாக விளையாடவில்லை என்று தனது கருத்தின் மூலமாக மறைமுகமாக கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன கேஎல் ராகுலை பெங்களூர் அல்லது பஞ்சாப் அணி பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனுபவமிக்க பேட்ஸ்மேனை எந்த அணி எடுக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -