ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 35 வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் கேஎல் ராகுல் இந்தப் போட்டியின் மூலமாக சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
டெல்லி குஜராத் மோதல்
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த சூழ்நிலையில் இந்தத் தொடரின் 35 வது போட்டியில் அக்சார் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது.
தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 23 ரன்கள் குவித்த நிலையில் அதற்கு பின்னர் களமிறங்கிய டெல்லி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 14 பந்துகளை எதிர்கொண்ட அவர் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலமாக கேஎல் ராகுல் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
கேஎல் ராகுல் சிறப்பான சாதனை
அதாவது ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல். ராகுல் பெற்றிருக்கிறார். 129 ஆவது இன்னிங்ஸ் விளையாடிய கேஎல் ராகுல் தனது 200 வது சிக்சரை பூர்த்தி செய்து இருக்கிறார். இந்த டாப் லிஸ்ட் பட்டியலில் முதல் இந்திய வீரராகவும் அவரே இருக்கிறார். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 69 இன்னிங்ஸ்கள் விளையாடி இந்த சாதனை படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க:கில் தமிழ்நாட்டு பையன் என்ன தப்பு செஞ்சார்?.. கேப்டனா ஓவரை பிரிக்கக்கூட தெரியாதா? – ரசிகர்கள் விமர்சனம்
அவருக்கு அடுத்த இடத்தில் அதே வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ஆன்ட்ரே ரசல் 97 இன்னிங்ஸ்களிலும் கேஎல் ராகுல் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில் அதற்கு அடுத்த இடத்தில் தென்னாப்பிரிக்க அணியின் ஏபி டிவில்லியர்ஸ் 137 இன்னிங்ஸ்களிலும் அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 148 இன்னிங்ஸ்கள் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். அதேபோல 200க்கும் அதிகமான சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆறாவது வீரராக கே.எல் ராகுல் இணைந்திருக்கிறார். இதில் 286 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






