“சூப்பர் மேன் ஆக மாறிய கே.எல்.ராகுல்” – அருமையான கேட்ச்சின் மூலம் வீழ்ந்த ஸ்டீவன் ஸ்மித் வீடியோ!

0
303

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த கிரிக்கெட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்தியா ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது .

இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறாத நிலையில் அவருக்கு பதிலாக இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜாவும் ஒரு நாள் அணிக்கு திரும்பி இருக்கிறார். ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை டேவிட் வார்னர் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடையாத காரணத்தால் மிச்சல் மார்ஸ் துவக்க வீரராக களம் இறங்கினார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்திரேலியா திரும்பியதால் ஜோஸ் இங்கிலீஷ் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

- Advertisement -

துவக்கத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் முகமது சிராஜ் ட்ராவஸ் ஹெட் விக்கெட்டை கிளீன் போல்ட் மூலம் வீழ்த்தி இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தார். இதன் பிறகு மிச்சல் மார்ஸ் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்மித் அணியின் ஸ்கோர் உயர சிறப்பாக ஆடினார் .

ஒரு முனையில் மிச்சல் மார்ஸ் அதிரடியாக ஆட மறுமுனையில் ஸ்டீவன் ஸ்மித் நிதானமாக அவ்வப்போது பௌண்டரிகளை அடித்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்திய அணியினருக்கு வாய்ப்பு கொடுக்காமல் சிறப்பாக ஆடியது இந்த ஜோடி.

இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட் இருக்கு 72 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் ஆட்டத்தின் பனிரெண்டாவது ஓவரில் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஸ்டீவன் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்து இந்தியா அணிக்கு பிரேக் த்ரூ எடுத்துக் கொடுத்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்டீவன் ஸ்மித் 12.3 ஓவரில் விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா வீசிய அவுட் ஸ்விங்கரை கட் ஷாட் ஆட முயன்ற போது அவுட் சைட் எட்ஜில் பட்டு கீப்பரை விட்டு விலகிச் சென்ற பந்தை சூப்பர் மேன் ஆக மாறி பாய்ந்து கேட்ச் எடுத்தார் கே எல் ராகுல் . இந்தப் பதிவுடன் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா அணி 21 ஓவர்களில் 133 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது.