உண்மையான பெரிய மனுஷன் கேஎல் ராகுல் தான்யா! தன்னோட ரெக்கார்டை உடைத்த ஜெய்ஸ்வால்-க்கு தலைவணங்கி ட்வீட் போட்ட கேஎல் ராகுல்!

0
599

கேஎல் ராகுல் வசம் ஐந்து வருடங்களாக இருந்த ரெக்கார்டை உடைத்த ஜெய்ஸ்வாலுக்கு பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார கேஎல் ராகுல்.

கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 150 ரன்களை இலக்காகநிர்ணயித்தது.

- Advertisement -

இதனை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு யஷஷ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக துவங்கினார். இவர் 13 பந்துகளில் அரைசதம் அடித்தது ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார்.

போட்டியில் 47 பந்துகளில் 98 ரன்கள் விளாசிய இவர், இறுதி வரை ஆட்டம் இழக்காமல் ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தார். 13.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 150 ரன்கள் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சாதனை முறியடிப்பு..

- Advertisement -

2018ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விளையாடி வந்த கேஎல் ராகுல், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் விளாசினார். கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த பாட் கம்மின்ஸ் 14 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

இவை இரண்டும் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதங்களாக இருந்தது. கேஎல் ராகுல், பாட் கம்மின்ஸ் இருவரின் சாதனையை, நேற்றைய தினம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் முறியடித்து வரலாற்றில் தனது முத்திரையை பதித்தார்.

கடந்த ஐந்து வருடங்களாக தன் வசம் இருந்த அதிவேக அரைசதம் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்-க்கு தலைவணங்குவது போல ட்வீட் செய்துள்ளார் கேஎல் ராகுல். தன்னுடைய சாதனையை முறியடித்தவரை மதித்து பாராட்டி ட்வீட் செய்த கேஎல் ராகுல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறார். இவருடைய நற்குணங்களை மற்ற வீரர்களும் கற்றுக்கொள்ள வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்றும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரை சதம் அடித்தவர்கள் பட்டியல்

  1. யஷஷ்வி ஜெய்ஸ்வால் – 13 பந்துகள் – 2023
  2. கேஎல் ராகுல் – 14 பந்துகள் – 2018
  3. பாட் கம்மின்ஸ் – 14 பந்துகள் – 2022
  4. யூசுப் பதான் – 15 பந்துகள் – 2014
  5. சுனில் நரைன் – 15 பந்துகள் – 2017
  6. நிக்கோலஸ் பூரான் – 15 பந்துகள் -2023