ஷாருக்கான் போன்ற ஒரு முதலாளி வேண்டும்.. இதுதான் கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்லது – கேகேஆர் ஆலோசகர் பிராவோ

0
76

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் சிஎஸ்கேவின் முன்னாள் வீரரான டுவைன் பிராவோ தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இணைந்திருக்கிறார்.

இந்த நிலையில் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

கேகேஆர் அணியின் ஆலோசகர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த டுவைன் பிராவோ, சென்னை அணியில் இருந்து ஓய்வு பெற்று பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார். இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர், தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வரும் நிலையில் அவரது இடத்திற்கு டுவைன் பிராவோ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிராவோ ஏற்கனவே கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ஷாருக்கானின் மற்றொரு அணியான டிரிபான்கோ அணியில் விளையாடி வரும் நிலையில், அந்த இணைப்பு வலுவாக இருந்ததால் தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் கிரிக்கெட்டுக்கு ஷாருக்கான் போன்ற முதலீடு செய்யக்கூடிய ஒரு முதலாளி வேண்டும் என்று அவர் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஷாருக்கான் போன்ற முதலாளி வேண்டும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஷாருக்கான் போன்ற ஒரு முதலாளி விளையாட்டில் முதலீடு செய்திருப்பது எப்போதுமே ஒரு நல்ல விஷயமாகும். அவர் ட்ரிபான்கோ நைட் ரைடர்ஸ் அணியை வாங்கிய போது இந்த அணிக்காக எனது முதல் விஷயம் தொடங்கியது. அவரைப் போன்ற ஒருவர் கரீபியனில் மட்டுமல்ல என் சொந்த ஊரிலும் ஒரு அணியை வாங்க அந்த ஆர்வத்தை காட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியான நபராக இருக்கிறேன்” என்று பிராவோ கூறுகிறார்.

இதையும் படிங்க:ஐபிஎல் தொடரே வேண்டாம்.. அவர் சம்பாதிக்க எங்க நாட்டு கிரிக்கெட்டே போதும் – இங்கி மார்க் பட்சர் ஆதரவு

பிராவோ முதல் முதலாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி விளையாடினார். அதற்குப் பிறகு இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அப்படியே வாங்கிக் கொண்டது. அன்றிலிருந்து இவருக்கு சென்னையில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வரை சென்னை அணியின் பௌலிங் கோச்சாக பணியாற்றி வந்தவர், தற்போது கொல்கத்தா அணியில் ஆலோசகராக செயல்பட இருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி அஜின்கியா ரகானே தலைமையில் களமிறங்க இருப்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -