ஐபிஎல் தொடரே வேண்டாம்.. அவர் சம்பாதிக்க எங்க நாட்டு கிரிக்கெட்டே போதும் – இங்கி மார்க் பட்சர் ஆதரவு

0
397

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் மிக தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஹாரி புரூக் இறுதி நேரத்தில் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில் அவருக்கு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் பட்சர் ஆதரவினை வழங்கி தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஹாரி ப்ரூக் விலகல்

இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, ஐபிஎல் நிர்வாகம் ஒரு வீரர் இறுதி நேரத்தில் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற முடிவு செய்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே இது போன்று ஒருமுறை செய்திருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இதேபோன்று வெளியேறி இருக்கிறார். இந்த முறை அவரை டெல்லி கேப்பிட்டல் அணி 6.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு லாபகரமான ஐபிஎல் தொடரில் இருந்து தடை விதிக்கப்படுகிறார். இந்த சூழ்நிலையில் அவரது முடிவுக்கு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் பட்சர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சமமான ஊதியம் சம்பாதிப்பார்கள்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இது அவருக்கு தொழில் வாழ்க்கையை மாற்றும் ஒரு பருவமாக இருக்கலாம். இது இங்கிலாந்து அணிக்கு மெக்கல்லம், ஸ்டோக்ஸ் மற்றும் ப்ரூக் ஆகியோருக்கு கோடை காலத்தில் தங்களது திட்டங்களை வரையறுக்க நல்ல வாய்ப்பாக இருக்கலாம். அதனால் அவர் சரியான முடிவு எடுத்திருக்கிறார் என்று தான் நினைக்கிறேன். மேலும் அவர் இங்கிலாந்துக்காக விளையாடுவதன் மூலமாக நிறைய பணம் சம்பாதிப்பார். ஒரு கேப்டனாக ஒப்பந்தத்தில் உள்ள இங்கிலாந்து வீரராக இருக்கும்போது உங்கள் ஊதியம் என்பது ஒரு நல்ல விஷயமாகும்.

இதையும் படிங்க:ரோஹித் இன்னும் மூங்கில் மரம் ஏறணுமா.? தன்னை நிரூபிக்க வேறு என்ன செய்யணும் – இந்திய முன்னாள் வீரர் கேள்வி

நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள தேசிய அணியும், தேசிய விளையாட்டையும் வெளிப்புற தாக்கங்களில் இருந்து பாதுகாக்கப் போகிறோம் என்றால், நாம் விரும்பும் மற்றும் நமக்கு தேவையான வீரர்கள் அந்தப் போட்டிகள் உடன் சமமான ஊதியம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று பேசியிருக்கிறார். அதாவது ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் எவ்வளவு ஊதியம் பெறுகிறார்களோ அதற்குத் தகுந்த வகையில் இங்கிலாந்து கிரிக்கெட்டிலும் இருந்து சரியான ஊதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மார்க் பட்சர் பேசியிருக்கிறார்.

- Advertisement -