ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரை கடந்த வாரத்தில் இந்திய அணி ரோகித் சர்மா கேப்டன்ஷியில் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் வென்றது. இந்த நிலையில் ராகுல் டிராவிட் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்துவிட்டது. தற்பொழுது அடுத்த இந்திய அணியின் பயிற்சியாளர் யார்? என்பது குறித்து 99 சதவீதம் உறுதியாக இருக்கிறது.
ராகுல் டிராவிட் மேற்கொண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. எனவே அவர் இந்திய அணியை விட்டு டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார். அவருக்கு இந்திய அணியினர் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பான வழியனுப்பு விழாவை செய்தது.
இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளரை தீவிரமாக தேடியது. இதில் இறுதியாக இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கவுதம் கம்பீர் மற்றும் டபுள்யு.வி.ராமன் இருவரது பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. எனவே இந்த இருவரில் யார்? என்பதில் குழப்பம் நீடித்தது.
குறிப்பாக டபுள்யு.வி.ராமன் பயிற்சியாளர் பொறுப்பில் நீண்ட கால அனுபவம் கொண்டவர். எனவே அடுத்த பயிற்சியாளராக அவர் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது என்று கடந்த வாரங்களில் செய்திகள் பரவியது. இதனால் கவுதம் கம்பீர் எதிர்பார்த்தபடி இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக மாட்டார் என்று கூறப்பட்டது.
தற்பொழுது கவுதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வருவார் என்பதற்கான ஒரு சம்பவம் நடைபெற்று உறுதிப்படுத்தியிருக்கிறது. தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராக இருந்து வரும் கவுதம் கம்பீரை வழியனுப்புவதற்காக, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பேர்வெல் வீடியோ சூட்டிங் நடைபெற்று இருக்கிறது என செய்திகள் வருகிறது.
இதையும் படிங்க : ரோகித் கோலி ரிட்டையர்டு ஆயிட்டாங்க.. நாங்க தோத்ததுக்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கு – ரவி பிஸ்னாய் பேட்டி
கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீடியோ சூட்டிங் நடைபெற்று இருப்பதாக பத்திரிகை செய்தி கூறுகிறது. எனவே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வருவது தற்பொழுது 99 சதவீதம் உறுதியாகி இருக்கிறது. ஜிம்பாப்வே தொடர் முடிந்து அடுத்து இலங்கையில் நடைபெற இருக்கும் தொடருக்கு புதிய பயிற்சியாளர் பொறுப்பேற்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது!






