சிக்கலில் கொல்கத்தா அணி ; முதல் 5 போட்டிகளில் முக்கிய வெளிநாட்டு வீரர்கள் இல்லை – ஆலோசகர் டேவிட் ஹசி அதிர்ச்சித் தகவல்

0
100
David Hussey KKR

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் சமனில் முடிவடைந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

டெஸ்ட் தொடர் நடந்து முடிந்த உடன் வருகிற மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி வரையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கின்றன. பின்னர் ஏப்ரல் 5ஆம் தேதி ஒரேயொரு டி20 போட்டியும் நடைபெற இருக்கின்றது.

- Advertisement -
கொல்கத்தா அணிக்கு காத்திருக்கும் பெரிய சவால்

கொல்கத்தா அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் ஹசி தற்போது திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி கொண்டிருக்கும் பேட் கம்மின்ஸ், பின்னர் ஒருநாள் தொடரில் களமிறங்க இருக்கும் ஆரோன் பின்ச் ஆகிய இருவரும் கொல்கத்தா அணிக்கு முதல் ஐந்து போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

அவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் விளையாடி முடித்த பின்னரே ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு வீரருக்கும் தேசியக் கடமை மிகவும் முக்கியம். ஐபிஎல் தொடர் முக்கியம் என்றாலும், தேசிய அணிக்கு விளையாடுவது அதைவிட முக்கியம். எனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி தங்களுடைய பணிகளை முடித்த பின்னர் அவர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வார்கள் என்றும் விளக்கமளித்துள்ளார்.

விக்கெட் கீப்பர் பற்றி எந்தவிதக் கவலையும் தேவையில்லை

ரசிகர்கள் பலரும் கொல்கத்தா அணி சரியான விக்கெட் கீப்பர் எடுக்காமல் விட்டு விட்டது என்று சமூக வலைதளங்களில் குறை கூறி வந்தனர். அது சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கு “ஷெல்டன் ஜாக்சன் டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு வீரர். அதேபோல இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் பில்லிங்ஸ் டெஸ்ட் போட்டிகளில் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார் அதேசமயம் விக்கெட் கீப்பிங்கிலும் அவர் நன்கு விளையாடக் கூடிய திறமை பெற்றவர்.

- Advertisement -

எங்களது அணி பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஒருங்கிணைந்து அவர்களை சிறப்பாக தயார்படுத்தி, அவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவார்கள். எனவே அதில் எந்தவித கவலையும் கொள்ளத் தேவையில்லை என்று நம்பிக்கையுடன் டேவிட் ஹஸி கூறியுள்ளார்.

கொல்கத்தா அணி வருகிற மார்ச் 26 ஆம் தேதி அன்று அதனுடைய முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.