இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் டீம் தொடர் 25வது ஆட்டத்தில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெயிக்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக எம்எஸ் தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக பொறுப்பேற்றார்.
கேகேஆர் சிஎஸ்கே மோதல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இருப்பினும் எம் எஸ் தோனி டாசின் போது பேசுகையில் நாங்கள் டாஸ் வென்று இருந்தால் முதலில் பேட்டிங் செய்யவே தீர்மானித்திருப்போம் என்று கூறினார். இந்த சூழ்நிலையில் பேட்டிங் தொடங்கிய சென்னை அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவிந்த்ரா ஒன்பது பந்துகளில் வெறும் நாளுடன் எடுத்த நிலையில் ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கானவே 11 ரன்னில் வெளியேற, அதற்குப் பிறகு எந்த ஒரு சிஎஸ்கே பேட்ஸ்மேனும் அதிரடியான ஆட்டத்தை விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக சிவம் தூபே மட்டுமே 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இருப்பினும் கடைசிவரை விளையாடிய அவர் ஒரு சிக்சர் மட்டுமே அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸில் சிஎஸ்கே மொத்தமாக ஒரே ஒரு சிக்சர் மட்டுமே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே வரலாற்று படுதோல்வி
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. சென்னை அணி விளையாடிய இன்னிங்ஸ்க்கு கொல்கத்தா அணி அப்படியே நேர்மாறாக விளையாடியது. தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை கொல்கத்தா அணி வெளிப்படுத்தியது. பவர் பிளேவில் நான்கு ஓவர்களில் 46 ரன்கள் குவித்திருந்த போது தொடக்க வீரர் டிக்காக் அன்சூல் கம்போஜ் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். இதில் சுனில் நரேன் 18 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு இரண்டு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸ் என 44 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:ருதுராஜ் வழியில் தோனியும் செய்த தப்பு.. நீங்கலாம் திருந்தவே மாட்டீங்களா?.. சிஎஸ்கே ரசிகர்கள் கோபம்
இறுதியில் கேப்டன் ரகானே 17 பந்துகளில் 20 ரன் மற்றும் ரிங்கு சிங் 12 பந்துகளில் 15 ரன் என குவிக்க கொல்கத்தா 10.1 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 107 ரன்கள் குவித்து எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா இந்த போட்டியில் 59 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக குறைந்த ஓவர்களிலேயே மிக வேகமாக சேஸிங் செய்த அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மும்பை அணி சென்னை அணியை 12 ஓவர்களில் இருந்தபோது வெற்றி பெற்றது.






