ருதுராஜ் வழியில் தோனியும் செய்த தப்பு.. நீங்கலாம் திருந்தவே மாட்டீங்களா?.. சிஎஸ்கே ரசிகர்கள் கோபம்

0
891
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் மிகவும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது. கேப்டன் பொறுப்பில் ருதுராஜ் போலவே தோனியின் அணித் தேர்வும் இருப்பது சிஎஸ்கே ரசிகர்களை கடுமையாக கோபம் அடைய வைத்திருக்கிறது.

தற்போது சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 4 போட்டிகளை தொடர்ந்து தோற்று இருக்கிறது. இந்த நிலையில் கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். எனவே இஞ்சி உள்ள போட்டிகளுக்கு தோனி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

மோசமான திட்டத்தை மாற்றாத தோனி

இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற பொழுது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என வெளியில் இருந்து சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பஞ்சாப் போன்று மிக மோசமாக செயல்படும் அணி கூட இளம் வீரர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டியிலும் ஷேக் ரசீத் மற்றும் வன்ஸ் பேபி இருவரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் ராகுல் திரிபாதிக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் மிக மெதுவாக விளையாடியதோடு, கடைசியில் பந்து எந்த திசையில் வருகிறது என்று கணிக்க முடியாமல் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

மீண்டும் பதுங்கிய தோனி

இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் தோனி ஐந்தாவது களமிறங்கக்கூடிய சூழல் வந்த பொழுதும் அவர் வரவில்லை. அஸ்வினை அனுப்பி அதற்குப் பிறகு ஜடேஜாவையும் அனுப்பி வைத்தார். இந்த நிலையில் அதற்கு அடுத்தும் வராமல் இம்பேக்ட் பிளேயராக பத்திரனாவுக்கு பதிலாக தீபக் ஹூடாவை அனுப்பி வைத்தார். பிறகு தோனி பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது ஆக வந்து நான்கு பந்தில் ஒரு ரன் எடுத்து சுனில் நரைன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : களத்தில்தான் கோச் நெஹ்ரா பரபரப்பா இருப்பாரு.. ஆனா நிஜத்தில் இப்படியான குணம் கொண்ட மனிதர்தான் – குஜராத் வீரர் பேட்டி

தற்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காததும், தோனி பேட்டிங் வரிசையில் ஐந்தாவது வீரராக வராததும் சிஎஸ்கே ரசிகர்களை கடுமையாக கோபமடைந்து வைத்திருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் சமூக வலைதளத்தில் மிகவும் கடுமையாக விமர்சனங்களை சொந்த அணி மீது வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -