2 ஃபாரின் பிளேயர்ஸ் கூட சேர்ந்து திட்டம் போட்டன்.. சிஎஸ்கேவ சுருட்டுனது இப்படிதான் – ரகானே விளக்கம்

0
53
Rahane

நேற்று சிஎஸ்கே அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து ரகானே தலைமையிலான கொல்கத்தா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் 10 ஓவர்களில் வென்றது. இந்த வெற்றி குறித்து ரகானே சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.

இந்த போட்டிக்கு சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தோனி திரும்பியதும், மேலும் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடிய காரணத்தினாலும், சிஎஸ்கே அணி மீண்டும் பெற்று பாதைக்கு திரும்புவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் நம்பினார்கள். இந்த நிலையில் நேற்று தான் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

எங்க மூணு பேருக்கு எல்லாம் தெரியும்

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் வெற்றி குறித்து பேசி இருக்கும் ரகானே “நாங்கள் சென்னை சேப்பாக்கத்திற்கான திட்டத்தை வைத்திருந்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் இங்குதான் விளையாடினேன். மேலும் மொயின் அலி மற்றும் டிஜே.பிராவோ இருவருமே சென்னை அணிக்காக விளையாடி நல்ல அனுபவம் பெற்றவர்கள். இங்கு பொதுவாக பந்து கொஞ்சம் ஆடுகளத்தில் ஒட்டி நின்று வரும். இன்றைய போட்டியில் கிரெடிட் எங்களுடைய ஸ்பின்னர்களுக்கு செல்கிறது. எங்கள் திட்டங்கள் நன்றாக வேலை செய்தன”

“மேலும் இந்த போட்டியில் நாங்கள் என்ன மாதிரியான திட்டங்களை தீட்டினோம் என்று விளக்கமாக நான் சொல்ல விரும்பவில்லை. மொயின் அலியை அணிக்குள் கொண்டு வந்தது சிறப்பானது என்று நினைக்கிறேன். மேலும் விக்கெட் ஒரே மாதிரி மாறாமல் இருக்கும் என்று நம்பினேன். 170 ரண்களுக்கு மேல் எடுக்க முடியும் என்பது போல் தோன்றியது. ஆனால் எங்களுடைய ஸ்பின்னர்கள் எல்லாவற்றையும் மாற்றி விட்டார்கள்”

- Advertisement -

மொயின் அலி செய்வது சாதாரணம கிடையாது

“மொயின் அலி ஒரு ஆட்டம் விட்டு ஒரு ஆட்டம் அணிக்குள் வந்து விளையாடுகிறார். இது சாதாரண விஷயம் கிடையாது. மேலும் நரைன் மற்றும் வரும் இருவரும் அவர்களுடைய வேலையை மிக கச்சிதமாக செய்து முடித்தார்கள். எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கான கிரெடிட்டை யாராலும் பறிக்க முடியாது”

இதையும் படிங்க : மனசு காயமா இருக்கு.. தோல்விக்கு நாங்க தகுதியான ஆளுங்க.. இனி இது தெரிஞ்சிடும் – சிஎஸ்கே கோச் மைக் ஹசி பேட்டி

“கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அனுபவித்து நான் விளையாடி வருகிறேன். மேலும் இந்த போட்டியில் ஆரம்பத்தில் ரன் ரேட் குறித்து நினைக்கவில்லை. ஆனால் பவர் பிளேவுக்கு பிறகு சீக்கிரத்தில் வெற்றி பெற்றால் ரன் ரேட் உதவும் என நினைத்தேன். கடந்த போட்டி எங்களுக்கு சரியாக செல்லவில்லை. நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மிகவும் வருத்தத்தை கொடுத்தது. ஆனால் அதிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -