சிஎஸ்கே போட்ட பிரில்லியன்ட் பிளான்.. பதிரனாவுக்கு அடித்த ஜாக்பாட் – மாறிய நிலவரங்கள்

0
299
CSK

இன்று அபுதாபியில் நடைபெற்று வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே புதிய திட்டங்களுடன் வந்து மிக பொறுமையாக காத்திருக்கிறது.

அதே சமயத்தில் சிஎஸ்கே அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட மதீசா பதிரனாவுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. மேலும் பல வீரர்கள் விற்கப்படாமல் போயிருக்கிறார்கள். அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கியவுடன், விற்கப்படாத வீரர்களையும் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சிஎஸ்கே மாஸ்டர் பிளான்

இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் கேமரூன் கிரீன் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் பெரிய வேலைக்கு போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த இருவரில் ஒருவரை சிஎஸ்கே அணி வாங்கும் என்றும் கூறப்பட்டது. இன்னொருவரை கேகேஆர் அணி வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுபோலவே கேகேஆர் கேமரூன் கிரீனை வாங்கியது.

இந்த நிலையில் சிஎஸ்கே வெங்கடேஷ் ஐயரை வாங்க முன் வரவில்லை. மேலும் இந்திய ஸ்பின்னரான ரவி பிஸ்னாயை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரையும் வாங்கவில்லை. ஆனால் ரவீந்திர ஜடேஜா இடத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் ஸ்பின் ஆல் ரவுண்டர் அகேல் உசேனை வாங்கி அசத்தி இருக்கிறது. சிஎஸ்கே அணி மேற்கொண்டு உள்நாட்டு வீரர்களில் சிறந்தவர்களை ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளது போல தெரிகிறது. அவர்களை வாங்க பணத்தை மீறி செய்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

பதிரனாவுக்கு அடித்த லக்

கேகேஆர் அணிக்கு இறுதிக்கட்ட ஓவர்களை வீசுவதற்கு சரியான வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் தடுமாறி வந்தது. இதற்கு முன்பாக இந்த இடத்திற்கு ஸ்டார்க்கை வாங்கி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. ஆனால் கடந்த மெகா ஏலத்தில் அவரை வாங்க முடியவில்லை.

இதையும் படிங்க : 16 கோடி லாபத்தில்.. ஆர்சிபி க்கு அடித்த அதிர்ஷ்டம்.. மற்ற அணிகளுக்கு என்ன ஆச்சு?.. ஏலத்தில் ஆச்சரியம்

இதன் காரணமாக லக்னோ அணியுடன் கடுமையாக போட்டியிட்டு கேகேஆர் இறுதிக்கட்ட ஓவர்களை வீசுவதற்காக பதிரனாவை 18 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. சிஎஸ்கே அவரை 12 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது. இந்த நிலையில் தற்போது ஆறு கோடி ரூபாய் அதிகமாக அவர் விலை போய் இருக்கிறார். இது யாருமே எதிர்பாராத ஒன்றாக அமைந்திருக்கிறது.

- Advertisement -