408-7.. இந்தியாவின் அடுத்த தோனி இரட்டை சதம் அடித்து அசத்தல்.. U19 ஆசியக் கோப்பையில் அபாரம்

0
43
Kundu

தற்போது நடைபெற்று வரும் அண்டர் 19 ஆசியக் கோப்பை தொடரில் இந்தியாவின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் அபிக்யான் குன்டு இரட்டை சதம் அடித்து அசத்தி இருக்கிறார்.

இன்று இந்திய அணி மலேசிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மலேசியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்த ஆசியக் கோப்பை தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நட்சத்திர வீரர்கள் வெளியேற்றம்

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஸ் மாத்ரே 7 பந்துகளில் 14 ரன்கள் வைபவ் சூரியவன்சி 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து, அதிரடியான தொடக்கத்தை கொடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து வந்த மல்கோத்ரா 7 ரன்னில் வெளியேறினார்.

இந்த நிலையில் நான்காவது இடத்தில் வந்த வேதாந்த் திரிவேதி சிறப்பாக விளையாடிய 106 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் உடன் 90 ரன்கள் எடுத்து வெளியேற, இன்னொரு முனையில் இந்திய அணிக்கு தொடர்ந்து விக்கெட் சரிவு ஏற்பட ஆரம்பித்தது.

- Advertisement -

அடித்து நொறுக்கிய அடுத்த தோனி

இருந்த போதும் ஒரு முனையில் நிலைத்து நின்ற 17 வயதான இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் அபிக்யான்
குன்டு சதம் அடித்தார். ஆனால் அணி சிக்கலில் இருப்பதை உணர்ந்து தொடர்ந்து நிலைத்து நின்று விளையாடி 121 பந்தில் இரட்டை சதமும் அடித்தார். மேலும் இறுதிவரை களத்தில் நின்று 125 பந்துகளில்17 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 209 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க: ஆர்சிபிக்கு ஏலத்துல இதுதான் முக்கிய வேலை.. அந்த 2 வீரர்களை வாங்கினா முடிந்தது – அனில் கும்ப்ளே கருத்து

இவரது அதிரடியின் காரணமாக இந்திய அணியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் குவித்தது. மேலும் இவர் விக்கெட் கீப்பராக இருப்பதோடு ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்து சிறப்பாக விளையாடுவதால், இவரை இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அடுத்த தோனி என அழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -