தோல்வி அடைந்த பொழுதிலும் விராட் கோலி செய்த இந்த காரியத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களும் நெகழ்ச்சி – வீடியோ இணைப்பு

0
381

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று இரவு 2-வது தகுதி சுற்று ஆட்டம் நடந்து முடிந்தது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய புலவு 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ராஜட் பட்டிதர் 42 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய பிரசித் கிருஷ்ணா மற்றும் ஒபெட் மெக்காய் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணி 18.1ஆவது ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 106* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்றைய போட்டிக்கான ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரன் ஓட வாய்ப்பு இருந்தும் அதை மறுத்த விராட் கோலி

நேற்று முதல் ஓவரை போல்ட் வீசினார். முதல் பந்து டாட் பாலாக அமைய 2-வது பந்தை விராட் கோலி ஸ்கொயர் லெக் பக்கம் அடித்தார். அங்கே நின்று கொண்டிருந்த ஜோஸ் பட்லர் சாமர்த்தியமான தடுத்து ஓடிக்கொண்டிருந்த விராட் கோலியை ரன் அவுட் ஆக்க முயற்சித்தார்.

ஆனால் விராட் கோலி விரைவாக ஓடி வந்து நான் ஸ்டிரைக்கை ரீச் செய்துவிட்டார். இருப்பினும் பட்லர் வீசிய பந்து நேராக விராட் கோலியின் பேட்டில் பட்டு மறு திசையில் சென்றது. அப்போது விராட் கோலிக்கு இன்னொரு ரன் ஓடும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் கையை உயர்த்தி ரன் எதுவும் ஓடாமல் விராட் கோலி அங்கேயே நின்றார்.

விராட் கோலி கண்ணியமாக நேற்று நடந்து கொண்ட விதம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. விராட் கோலி ரன் ஓட மறுத்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

நாளை நடைபெற இருக்கும் இறுதியாட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளனர்.