அடுத்தடுத்து 5 சிக்ஸ்.. ரசித் கான் ஓவரில் அடிக்க.. இந்த 2 விஷயம்தான் காரணம்.. – பொல்லார்டு விளக்கம்

0
315
Pollard

நேற்று இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்து தொடரில் ரஷித் கான் வீசிய ஒரே ஓவரில் கீரன் பொல்லார்டு 5 சிக்ஸர்கள் தொடர்ச்சியாக அடித்தது அசத்தினார். எதிர்பாராத அவரது அதிரடியின் காரணமாக அவர் விளையாடிய பிரேவ் சதர்ன் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது பெற்ற பொல்லார்டு இது குறித்து பேசி இருக்கிறார்.

நேற்று டிரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் பிரேவ் சதர்ன் அணிகள் மோதிக்கொண்ட போட்டி 100 பந்து தொடரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி பேட்டிங்கில் பெரிய அளவில் அதிரடியாக விளையாட முடியவில்லை. இறுதியாக அந்த அணி 100 பந்துகளையும் விளையாடி மொத்தம் 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து சிறப்பாக ஆரம்பித்த பிரேவ் சதர்ன் அணி திடீரென விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. அணியை சரிவில் இருந்து மீட்க வந்த பொல்லார்டு நிறைய டாட் பந்துகள் ஆரம்பத்தில் விளையாடினார்.மேலும் அந்த அணிக்கு கடைசி 20 பந்தில் வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது.

ரஷித் கான் முதல் தனது முதல் 15 பந்துகளில் 10 ரன்கள் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் தனது கடைசி ஐந்து பந்துகளை வீச வந்தார். இந்த நிலையில் ரஷீத் கான் ஓவரை முழுமையாக சந்தித்த பொல்லார்டு ஐந்து பந்துகளையும் அடுத்தடுத்து சிக்ஸர்களாக அடித்து நொறுக்கிவிட்டார். பிரேவ் சதர்ன் அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் பொல்லார்டு மற்றும் ரஷித் கான் இருவரும் வெளிநாட்டு டி20 லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடக் கூடியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆட்டநாயகன் விருது பெற்ற பொல்லார்டு பேசும் பொழுது “நான் ரஷீத் கானுக்கு எதிராக நிறைய விளையாடியிருக்கிறேன். மேலும் அவர் என்னை பலமுறை அவுட் செய்திருக்கிறார். நான் உள்ளே விளையாட வந்த பொழுது என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டி இருந்தது. அதே சமயத்தில் அவருடைய லைன் அண்ட் லென்த் எனக்கு நன்றாகத் தெரியும். எனவே அவர் பந்து வீசினால் நான் அடிக்கலாம் என்று நினைத்தேன்.

- Advertisement -

மேலும் அவர் எனக்கு ஃபுல் லென்த்தில் பந்தை கொடுத்தால் நான் நேராக என்னுடைய பலத்தில் அடிக்க முடிவு செய்தேன். அவரோ எனக்கு மூன்று ஃபுல் லென்த் பந்தை வீசினார். அந்தப் பந்துகள் சரியாக என்னுடைய ஆர்க்கிள் இருந்தது. மேலும் எங்களுக்கு ரன்கள் தேவையாக இருந்தது. எனவே நான் நேராக அடிக்க சென்றேன்

இதையும் படிங்க : பங்களாதேஷ் டெஸ்ட்.. இந்திய அணி தோற்றால்.. புள்ளி பட்டியலில் காத்திருக்கும் பிரச்சனை.. நியூசிக்கு அடிக்கும் லக்

நாங்கள் பேட்டிங்கில் இந்த நிலைமைக்கு போட்டியை கொண்டு வந்திருக்கக் கூடாது. ஆனால் இதுபோன்ற நிலைமைகளில் என்ன நடக்கிறது என்று விளையாடி பழகி இருப்பதால் அதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த போட்டியில் இருந்து சில பாடங்கள் கற்றுக் கொண்டோம். மீண்டும் இது போன்ற சூழ்நிலையில் அணியை வைக்க மாட்டோம்” என்று கூறி இருக்கிறார்.