பங்களாதேஷ் டெஸ்ட்.. இந்திய அணி தோற்றால்.. புள்ளி பட்டியலில் காத்திருக்கும் பிரச்சனை.. நியூசிக்கு அடிக்கும் லக்

0
691
WTC

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்து மிக நீண்ட ஓய்வில் இருக்கிறது. இதற்கு அடுத்த செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடையும் பொழுது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அதிரடியான மாற்றங்கள் உருவாகும்.

இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக, பங்களாதேஷ்-பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து-இலங்கை அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கின்றன.

- Advertisement -

தற்போது இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வி அடையும் பொழுது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு சரியும். அதே வேளையில் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்திற்கு உயரும்.

மேலும் மூன்றாவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணியுடன் விளையாடி முடித்து இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. எனவே அந்தத் தொடரில் ஏதாவது தவறான முடிவுகள் அமைந்தால் நியூசிலாந்து இரண்டாவது இடத்திற்கு செல்ல இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு சென்று விடும்.

மேலும் இந்திய அணி அதற்கு அடுத்து ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடுகிறது. வெளிநாட்டில் விளையாடுகின்ற காரணத்தினால் தொடர் எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். எனவே பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமாக அமைகிறது.

- Advertisement -

இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்கக் கூடாது. இல்லையென்றால் ஒரு டெஸ்ட் போட்டியை தோற்று இன்னொரு போட்டியை டிரா செய்யக்கூடாது. இது இரண்டும் நடந்தால் இந்திய அணி முதல் இடத்தில் இருந்து கீழே வந்து விடும். அதே சமயத்தில் இரண்டு போட்டியையும் வென்றாலோ, ஒரு போட்டியை வென்று ஒரு போட்டியை டிரா செய்தாலோ இந்திய அணி முதல் இடத்திலேயே நீடிக்கும்.

இதையும் படிங்க: 60 ரன் 6 விக்கெட்.. வாய்ப்பை தவறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்.. தென் ஆப்பிரிக்கா அதிரடி பேட்டிங்.. 5வது நாள் சென்ற முதல் டெஸ்ட்

இந்திய அணி உள்நாட்டில் அடுத்தடுத்து பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சாதகமான நிலைமையில் விளையாடினாலும் கூட, இந்த இரண்டு அணிகளுக்கு எதிராகவும் இந்திய அணி வெற்றி பெறும் பொழுதுதான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்திய அணி உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.